கொலஸ்ட்ரால் என்பது இரத்தம் மற்றும் உடலின் செல்களில் இருக்கும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை உருவாக்குவதற்கு இது அவசியம். இது ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பித்த சாறு ஆகியவற்றை உருவாக்குகிறது. HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கிளிசரைடுகள் உடலில் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் தமனிகளுக்குள் கொழுப்பை உருவாக்கலாம். உணவு முறைகள் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். அதன்படி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் பானங்கள் பற்றி காணலாம்.
கிரீன் டீ ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். இதில் கேட்டசின்கள் மற்றும் எபிகல்லோகேடசின் கேலேட்டுகள் உள்ளன. இவை, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் கெட்ட LDL கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. பிளாக் டீயில் கிரீன் டீயை விட குறைவான கேடசின்கள் உள்ளன.
சோயா பாலில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக காணப்படுகிறது. அந்த வகையில் கொழுப்பு நிறைந்த பாலுக்கு மாற்றாய் இந்த சோயா பாலினை நாம் எடுத்துக் கொண்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படும்.
ஓட்ஸ் பால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் மிகவும் உதவியாக உள்ளது. ஓட்ஸில் பீட்டா - குளுக்கன்கள் காணப்படுகின்றன, இவை கொலஸ்ட்ரால் உறஞ்சுதலைத் தடுப்பதோடு, தேவையற்ற கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது. ஒரு கப் ஓட்ஸ் பால் 1.3 கிராம் பீட்டா குளுக்கனை வழங்குகிறது.
தக்காளி ஜூஸில் லைகோபீன் என்ற சேர்மம் காணப்படுகிறது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது செல் சேதத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்து மற்றும் நைசின் ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கும் இந்த ஜூஸ் லிப்பிட் அளவை அதிகரிப்பதோடு கெட்ட LDL கொழுப்பை கரைப்பதிலும் உதவுகிறது. இதில் நியாசின் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்தும் உள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 280 மில்லி கொழுப்பின் அளவை கணிசமாக குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
பெர்ரி ஸ்மூத்தி: ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி ஆகிய பழங்களில் ஏதேனும் ஒன்றை ஸ்மூத்தியாக தயார் செய்து பருகி வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். இவற்றில் காணப்படும் நார்ச்சத்து, அந்தோசினியன்கள் இதற்கு பெரிதும் உதவுகிறது.
கோகோ பானம் : டார்க் சாக்லேட்டின் முதன்மை மூலப்பொருளாக இருக்கும் கோகோ, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் காணப்படும் ஃபிளவனோல்கள் மற்றும் பிற ஆன்டி - ஆக்ஸிடன்கள் இதற்கு பெரிதும் உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட சாக்லேட்டுகளில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழ ஸ்மூத்தி : வாழைப்பழம், பால் பயன்படுத்தி தயார் செய்யப்படும் ஸ்மூத்தியில் உடல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் பண்பு காணப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மூத்தியினை தினமும் 250 மில்லி அளவுக்கு எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழங்கள் தவிர முட்டைக்கோஸ், பூசணி, முலாம்பழம் மற்றும் போன்ற பொருட்கள் கொண்ட ஸ்மூத்திகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
குறிப்பு : கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு ஆரோக்கியமான பானங்களை பருகும் அதேநேரம், கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு காரணமான பானங்களை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் கிரீம் சேர்க்கப்பட்ட காபி, டீ, தேங்காய் சேர்க்கப்பட்ட ஸ்மூத்திகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதே போல ஒரு நாளைக்கு 1.3 கிராம் ஸ்டெரால் மற்றும் 3.4 கிராம் ஸ்டானால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்று FDA கூறுகிறது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.