• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Protein Deficiency | உங்களிடம் போதுமான புரதச்சத்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க… இதான் அறிகுறி!

Protein Deficiency | உங்களிடம் போதுமான புரதச்சத்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க… இதான் அறிகுறி!

ஒருவரது உணவில் இருக்க வேண்டிய மிகவும் அவசியமான கூறுகளில் ஒன்று புரதம்.

  • Share this:
மனிதனுக்கு தேவையான முக்கிய சத்துக்களில் இன்றியமையாத ஒன்று புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து ஆகும். இந்த சத்து நம் உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியம். புரதச்சத்தை நம் உணவில் சேர்த்து கொள்ளாமல் மற்ற சத்துகளை மட்டுமே எடுத்து கொண்டால் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்க அடிப்படையான ஒன்று புரதம் தான். புரதத்திலிருக்கும் அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துணவாக மாறுகின்றன. அனைத்து உயிரணுக்கள் மற்றும் அவற்றின் ஒழுங்கமைப்பு மற்றும் சிறந்த செயல்பாட்டிற்கு புரதச்சத்து இன்றியமையாததாகும்.

ஒருவரது உணவில் இருக்க வேண்டிய மிகவும் அவசியமான கூறுகளில் ஒன்று புரதம். இது தசைகள், தோல் மற்றும் ஹார்மோன்களுக்கான ஒரு சிறந்த கட்டுமான தொகுதியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் திசுக்களை உருவாக்குவதற்கும் அவசியமாகிறது. ஒருவரின் சராசரி எடை 50 கிலோ என்றால் அவர் நாள்தோறும் உணவில் 50 கிராம் வரை புரதம் சேர்த்து கொள்ளலாம். ஆனால் நம் உணவு முறையில் காய்கறிகள் மற்றும் மாவுச்சத்து அடங்கிய உணவுகளே அதிகமாக எடுத்து கொள்கிறோம். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேவையான அளவு புரதச்சத்து எடுத்து கொள்வதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உடலில் புரத குறைபாடு இருப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் புரத குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



புரதச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்:

பொதுவாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு புரதச்சத்து குறைபாடு காணப்படுகிறது. புரதச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளில் முகம், தோல் மற்றும் வயிற்று பகுதியில் வீக்கம் ஏற்படுவது, முடி வறண்டு போவது உள்ளிட்டவை முக்கியமான அறிகுறிகள். உடலில் போதுமான அளவு புரதம் இல்லை என்றால், தசைகளானது அதனை எலும்புகளிலிருந்து எடுக்க துவங்குகின்றன. இதனால் பலவீனமடையும் எலும்புகள் காரணமாக எலும்புகளில் அழுத்த முறிவு (stress fracture) ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்களுக்கு உடலில் புரதம் குறைவாக இருப்பதால் ஆற்றலும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக தசைகளே அதிக ஆற்றலை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.



இது அவர்களுக்கு தசை வலி போன்ற சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தவிர, கால்சியம் குறைபாட்டை நகங்களின் தன்மை மூலம் அறியலாம். நகங்கள் மிக எளிதாக உடைய கூடிய தன்மையை பெறுவது, கால்சியம் குறைபாட்டை குறிக்கிறது. மேலும் உடல்சோர்வு மற்றும் அதீத களைப்பு உள்ளிட்டவை புரதக் குறைபாடு காரணமாக ஏற்படுவது மிகவும் பொதுவானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், எளிதில் நோய் தாக்கும் தன்மையை கொண்டவர்களுக்கும் புரதச்சத்து குறைபாடுகள் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு புரதச்சத்து பற்றாக்குறை இருந்தால் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு புரதம் நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட புரதத்தைப் பெறக்கூடிய பொதுவான உணவுகளை கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கோழி, மீன் மற்றும் கடல் உணவை சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை பெறலாம். புரதம் மிக்க ஏராளமான உணவுகள் இருப்பதால் மக்கள் தங்களுக்கு விருப்பமான புரத உணவுகளை தேர்வு செய்து தொடர்ந்து எடுத்து கொள்வது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: