Home /News /lifestyle /

தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆறு மதுபான வகைகள்

தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆறு மதுபான வகைகள்

grain liquor

grain liquor

Grain Alcohol | அரிசியிலிருந்து செய்யப்பட்ட வைன் என்பதை நீங்கள் பரவலாக கேட்டிருக்கக்கூடும். இதில் செக் அரிசியிலிருந்து செய்யப்பட்ட ஜப்பானிய நாட்டு வகை ஆல்கஹாலிக் வைனாகும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மதுபான வகைய விரும்புவார்கள். சிலருக்கு அதிக ஆல்கஹால் உள்ள பானங்களை விரும்புவார்கள், சிலர் மிதமான ஆல்கஹால் மற்றும் சுவையான பானத்தை விரும்புவார்கள். ஒயின் முதல் வோட்கா வரை அதிகமாக விரும்பப்படும், மது பானங்களைக் குடிக்க விரும்பாதவர்களுக்குக் கூட அவற்றை எப்படி தயாரிக்கிறார்கள் என்ற ஆர்வம் இருக்கும். பலருக்கும் விருப்பமாக இருக்கும் ஆறு மதுபானங்கள் தானியங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அதைப் பற்றிய விவரங்கள் இங்கே.

வோட்கா:

தண்ணீரைப் போல இருக்கும் ஒரு தெளிவான மதுபான வகையான வோட்கா, ஒரு சுத்திகரிக்கப்பட்ட மது பானமாகும். இதில் எத்தனால் மற்றும் சுவையூட்டிகள் உள்ளன. அதே நேரத்தில் ஃபெர்மெண்ட் செய்யப்பட்ட தானியங்களான அரிசி, மக்காச்சோளம் மற்றும் சமீப காலமாக கோதுமையும் சேர்க்கப்படுகிறது. எந்த அளவுக்கு சுத்திகரிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு வோட்காவின் சுவையும் தரமும் நன்றாக இருக்கும் என்று வோட்கா விரும்பிகள் கூறுகிறார்கள்.

விஸ்கி:

விஸ்கி பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. விஸ்கி தயாரிப்பில் ஃபெர்மெண்டேஷன் ஒரு முக்கியமான செயல் முறையாகும். இதில், பார்லி மால்ட்டுடன் வேறு சில தானியங்களும் சேர்க்கப்படுகிறது, இது விஸ்கியின் சுவையை அதிகரிக்கிறது.

பார்லி மால்ட் மிகவும் பிரபலமான ஸ்காட்ச் விஸ்கியை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற வகை விஸ்கி தயாரிப்பில், மக்கா சோளம், ஓட்ஸ் மற்றும் கோதுமை ஆகியவை அதிகம் சேர்க்கப்படுகிறது. கம்பு சேர்ப்பது விஸ்கியில் காரத்தன்மையை அதிகரிக்கிறது.



போர்பன் என்ற மற்றொரு பிரபலான விஸ்கி வகையும் அதிகமாக விரும்பப்படுகிறது. இந்த அமெரிக்க விஸ்கி வகையில் மக்காச்சோளம் மற்றும் பார்லி மால்ட் ஆகியவை சேர்க்கப்பட்டு வைன் போலவே புளிக்க வைக்கப்படும்.

சேக்:

அரிசியிலிருந்து செய்யப்பட்ட வைன் என்பதை நீங்கள் பரவலாக கேட்டிருக்கக்கூடும். இதில் செக் அரிசியிலிருந்து செய்யப்பட்ட ஜப்பானிய நாட்டு வகை ஆல்கஹாலிக் வைனாகும். வழக்கமாக பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் வைனில் இருந்து வேறுபட்டு, இந்த வைன் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சோடா இல்லாத மதுபான வகையாகும். இதில் 14 முதல் 16 சதவிகித ஆல்கஹால மட்டுமே உள்ளது.

Also Read : புகை பிடிப்பதை உங்களால் நிறுத்த முடியாவிட்டால், பாதிப்புகளை ஈடுகட்ட இந்த உணவுகளை முயற்சிக்கலாம்

பீர்:

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மதுபானமான பீர், பாரம்பரியமாக பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பார்லியுடன் பல்வேறு தானியங்கள் சேர்க்கப்பட்டு சுவையூட்ட படுகிறது. வெளிர் மஞ்சள் நிறம் முதல் அடர் மஞ்சள் நிறம் வரை இது பல்வேறு நிறங்களில் வருகிறது. இதில் சேர்க்கப்படும் தானியங்களின் தன்மைக்கு ஏற்ப இதனுடைய நிறமும் சுவையும் மாறுகிறது. பீர் தயாரிப்பில், கம்பு, அரிசி, மக்காச்சோளம் மற்றும் ஓட்ஸ் கூட சேர்க்கப்படுகிறது.



 

ஜின்:

ஜின் தயாரிப்பில் கோதுமை அல்லது பார்லி அதன் ‘பேஸ்’ ஆகப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் பல விதமான தானியங்கள் சேர்க்கப்படுகிறது. இந்த கலவை புளிக்க வைக்கப்பட்டு பின்பு சுத்திகரிக்கப்படும். மேலும், மசாலா பொருட்கள், வாசனை பொருட்கள் இயற்கையான மூலிகைகள் என்று பலவிதமான பொருட்கள் சேர்க்கப்பட்டு, இதன் சுவையும் மணமும் அதிகரிக்கிறது. வோட்கா சுவையில்லாத அதிக ஆல்கஹால் இருக்கும் மதுபான வகை, அதே போல, மிதமான ஆல்கஹகால் கொண்ட சுவையான ஜின் பெண்களால் அதிகமாக விரும்பப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Alcohol, Beer

அடுத்த செய்தி