Home /News /lifestyle /

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மசாலா பொருட்கள்..

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மசாலா பொருட்கள்..

காட்சி படம்

காட்சி படம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மசாலா பொருட்களின் பட்டியல் இதோ..

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  இந்திய உணவு என்றாலே அது எண்ணற்ற மசாலாப் பொருட்களுக்கு பெயர் பெற்றது, ஆனால் அவை கொண்டிருக்கும் பாசிட்டிவ் சிகிச்சை விளைவை நீங்கள் அறிவீர்களா? பண்டைய காலங்களிலிருந்து, மசாலாப் பொருட்கள் நம் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாவர வேர், மொட்டு அல்லது விதை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை  அதிகரிப்பது மட்டுமல்லாமல்  பல ஆச்சரியமான மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளன.

  உங்கள் அன்றாட உணவுத் திட்டத்தில் இத்தகைய பொருட்களை சேர்க்கும்போது இதய ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் முக்கிய மசாலாப் பொருட்களின் பட்டியல் இதோ..

  ஏலக்காய் (Cardamom) : இது ஒரு தனித்துவமான இனிப்பு மணம் கொண்ட இலவங்கப்பட்டை போன்ற பண்புகளைக் கொண்டுள்ள ஒரு மசாலாப் பொருள். இது வைட்டமின் A, D, மற்றும் கால்சியம், துத்தநாகம், இரும்பு மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. ஏலக்காயை உட்கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். ஏலக்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்லது என்கின்றனர். எனவே அதை முகப் பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம். அதேபோல் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெயில் இரண்டு சொட்டு விட்டு மசாஜ் செய்வதும் நல்லது.

  மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு (Turmeric and black pepper) : ஆரோக்கியத்திற்காக அறியப்பட்ட ஒரு மேஜிக்கல் மசாலா என்றால் அது மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு (Turmeric and black pepper) தான். உங்கள் உணவில் இவற்றை ஒருபோதும் தவறவிடக்கூடாது. அதன் முழுமையான சிகிச்சை விளைவுகளைப் பெற, மஞ்சளை கருப்பு மிளகுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும். குர்குமின் என்ற ஆக்ஸிஜனேற்ற பண்பு நிறைந்த தொகுதி அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம், அழற்சி, நீரிழிவு மற்றும் மனச்சோர்வை சமாளிக்க வேலை செய்கிறது. இதை பாலுடன் உட்கொள்ளலாம், அல்லது சமைக்கும் போது சமையலில் தூவலாம்.   இலவங்கப்பட்டை (Cinnamon) : இது ஒரு சக்தி நிரம்பிய மசாலா பொருளாகும் ஆகும், இது நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இலவங்கப்பட்டை பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாழை துண்டுகள், கிரீன் டீ மீது இதை தூவி குடிக்கலாம். நல்ல ஆரோக்கியமான இதயம் பெற இலவங்கப்பட்டை உதவுவதாகவும் மற்றும் இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு தீர்வளிப்பதாகவும் பாட்டி வைத்தியம் காலத்திலிருந்தே சொல்லப்படுகிறது.

  இஞ்சி (Ginger) : இஞ்சி ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது, பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிபிரைடிக், வலி நிவாரணி, மயக்க மருந்து (antibacterial, antipyretic, analgesic, sedative properties) பண்புகள் இதில் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதன்மூலம் இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாப்பாக வைக்கிறது.  இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்றாலும், அதைக் கடைப்பிடிப்பது நிச்சயமாக மகத்தான நன்மைகளைத் தரும். குற்ற உணர்ச்சியின்றி உங்களுக்கு பிடித்த, மிகவும் விரும்பப்படும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட நறுமணமுள்ள, சுவையான உணவுடன் இதை சேர்ப்பதன் மூலம் சிறந்த இதய ஆரோக்கியத்தை உங்களால் அனுபவிக்கமுடியும்.


  நம்ம வீட்டில் இருக்கும் பலவித பொருட்களும் எண்ணற்ற மருத்துவ தன்மைகளை கொண்டது. குறிப்பாக அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து வகையான மசாலா உணவு பொருட்களும் உடல் நலத்தை சரியாக வைக்க உதவும் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. மற்ற நாட்டு உணவு பொருட்களை காட்டிலும் நம் இந்திய உணவு ஒவ்வொன்றிலும் பலவித மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Heart health, Masala

  அடுத்த செய்தி