பெண்களின் கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய அளவிலான நீர்க்கட்டிகள் தோன்றும் நிலையைதான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்று அழைக்கின்றோம்.
அப்படி PCOS- ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன் என்பது முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. இதை குறைப்பது என்பதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அப்படி நீங்களும் PCOS உடல் எடையை குறைக்க நினைப்பவர் எனில் இந்த கோல்டன் டீயை பருகலாம். இது விரைவான எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல் PCOS-யின் போது ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையையும் சமன் செய்யும்.
நன்மைகள் :
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மற்றும் சருமத்தை பளபளப்பாக்குவது என பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு கோல்டன் டீ தீர்வாக உள்ளது.
கோல்டன் டீ தயாரிக்க தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி.
நெய் - 1 தேக்கரண்டி.
மிளகுத்தூள் / முழு மிளகு - 6.
செய்முறை :
முதலில் மிக்ஸில் முழு மிளகை போட்டு, நன்றாக அரைத்து பவுடராகவும். ரெடிமேட் பொடியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனென்றால், ரெடிமேட் பொடி அதன் தயாரிப்பு காரணமாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
ALSO READ : இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!
இப்போது, அடுப்பில் 1 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நீர் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஒரு கிளாஸ் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய், சிறிது மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்த கருப்பு மிளகு தூளை சேர்க்கவும்.
அதில், கொதிக்கும் வெந்நீரை ஊற்றி நன்றாக கலக்கவும். கலக்க ஸ்டிக் பிளெண்டர் அல்லது ஸ்பூனை பயன்படுத்தவும். இதில், நுரை மற்றும் கிரீம் பதத்திற்கு வந்தவுடன் கலக்குவதை நிறுத்தவும்.
இப்போது கோல்டன் டீ குடிக்க தயார். மஞ்சளின் சுவை அதிகமாக இருந்தால், அதில் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளவும். இதை உறங்குவதற்கு முன் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Herbal Tea, PCOS, PCOS Diet