மாலையில் சுட சுட சாப்பிட தேங்காய் பால் கொழுக்கட்டை : எளிமையாக செய்ய ரெசிபி..
மாலையில் சுட சுட சாப்பிட தேங்காய் பால் கொழுக்கட்டை : எளிமையாக செய்ய ரெசிபி..
தேங்காய் பால் கொழுக்கட்டை
எண்ணெய் திண்பண்டம், ரோட்டுக்கடை உணவுகள் சில நேரங்களில் உபாதைகளையும் உண்டாக்கும். எனவே இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க ஹெல்தியான முறையில் நீங்களே வீட்டில் செய்து கொடுங்கள்.
மாலையில் குழந்தைகளானாலும் சரி.. பெரியவர்களாக இருந்தாலும் சரி... எதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும் இருந்தால் கூடுதல் நல்லது. எண்ணெய் திண்பண்டம், ரோட்டுக்கடை உணவுகள் சில நேரங்களில் உபாதைகளையும் உண்டாக்கும். எனவே இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க ஹெல்தியான முறையில் நீங்களே வீட்டில் செய்து கொடுங்கள். அதற்கு இந்த தேங்காய் பால் கொழுக்கடையும் செய்து கொடுக்கலாம். எளிமையான ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
தேங்காய் - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
செய்முறை :
அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள். பின் உருட்டிய மாவில் பாதியை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து மீதம் உள்ள மாவில் துருவிய தேங்காய், இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாயில் வெல்லம் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பாகு செய்யுங்கள். வெல்லம் நன்கு உருகியதும் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின் மீண்டும் கடாயில் ஊற்றி உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பாகில் சேர்த்து கொதிக்க வையுங்கள். 5 நிமிடத்தில் உருண்டைகள் வெந்துவிடும்.
பின் பாதி எடுத்து வைத்துள்ள பிசைந்த அரிசி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே கொதிக்கும் வெல்லப் பாகில் ஊற்றிக் கிளறுங்கள்.
பின் ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு நெய்யும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கெட்டி பதம் வரும் போது தேங்காய் பால் ஊற்றுங்கள்.
ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.