முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வால்நட்டை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் ஸ்டோர் பண்ணி வைக்க டிப்ஸ்..!

வால்நட்டை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் ஸ்டோர் பண்ணி வைக்க டிப்ஸ்..!

வால்நட்

வால்நட்

ஷெல் அல்லது ஷெல் இல்லாத,வால்நட்டை காற்று புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டி அல்லது ப்ரீசரில் சேமிக்கிறீர்கள் என்றால், மறுசீரமைக்ககூடிய ப்ரீசர் பேக்குகளில் போட்டு வைக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அக்ரூட் பருப்பு எனப்படும் வால்நட்ஸ் மிகவும் சிறந்தது. இதில் ஒமேகா -3, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. பெரும்பாலான இந்தியா வீடுகளில் கையிருப்பு இருக்க கூடிய இதனை, காய்கறிகள் மற்றும் பழ சாலட்களில் கலக்கவும், இனிப்பை அலங்கரிக்கவும், காலை வேளைகளில் சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடவும் பயன்படுத்துகின்றனர்.

ஒரு அவுன்ஸ் வால்நட்சில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும் முந்திரி, பாதாம் பருப்புகளுடன் ஒப்பிடும் போது,வால்நட் எளிதில் கெட்டுப்போக கூடியது. நீங்கள் அக்ரூட் பருப்பை சரியான வழியில் சேமிக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவற்றைத் தூக்கி எறிவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

அக்ரூட் பருப்புகள் மொறு மொறுப்பை இழக்க காரணம் என்ன?

தாவர அடிப்படையிலான ஒமேகா-3-யை கணிசமான அளவில் கொண்டிருக்கும் ஒரே கொட்டை வகையைச் சார்ந்தது வால்நட்ஸ் மட்டுமே ஆகும். ஆனால் இந்த ஆரோக்கியமான கொழுப்பினால் தான் வால்நட்ஸ் மற்ற கொட்டைகளை விட விரைவில் புத்துணர்ச்சியை இழக்கும்.

இந்த ஊட்டச்சத்து நிறைந்த கொட்டைகள் கெட்டுப் போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை அறிய கீழே உள்ள குறிப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்:

1. எங்கு சேமிப்பது?

வால்நட்டை ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு சேகரித்தால் மட்டும் போதாது, அதனை சூரிய ஒளிபடாத இடத்தில் வைக்கவேண்டும். குறிப்பாக குளிர்ச்சியான மற்றும் இருண்ட பகுதியில் ஸ்டோர் செய்து வைப்பது நல்லது. ஓடு உடன் இருக்க கூடிய அல்லது ஓடு இல்லாத அக்ரூட் பருப்பை நீண்ட காலம் சேமித்து வைக்க நினைத்தால், அதனை ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது வைப்பது நல்லது. மேலும் அதனை நீங்கள் எப்படி எடுத்து பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து ப்ரிட்ஜ் அல்லது ப்ரீசரில் சேமித்து வைக்கலாம்.

உணவில் அதிக உப்பு சேர்ப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆயுள் குறைவு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

அதாவது கடையிலிருந்து வாங்கி வந்த வால்நட்டை ஒரு மாதத்திற்குள் பயன்படுத்துவிடுவீர்கள் என்றால் அதனை ஒரு ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு, குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்து வைக்கலாம். பல மாதங்களுக்கு அல்லது ஓராண்டுக்கு மேல் வால்நட்டை சேமித்து வைக்க நினைத்தால் அதனை ப்ரீசரில் சேமித்து வைப்பது நல்லது.

2. சேமித்து வைப்பது எப்படி?

ஷெல் அல்லது ஷெல் இல்லாத,வால்நட்டை காற்று புகாத கொள்கலனில் சேமிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டி அல்லது ப்ரீசரில் சேமிக்கிறீர்கள் என்றால், மறுசீரமைக்ககூடிய ப்ரீசர் பேக்குகளில் போட்டு வைக்கலாம்.

பருவகால நோய்களை தடுக்க வேம்பு டீ தயாரிப்பது எப்படி..? நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க...

மேலும் வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை புத்துணர்ச்சியுடன் பராமரிக்க, அவை ஈரப்பதம், ஒளி மற்றும் வெப்பம் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

top videos

    எப்போதுமே வால்நட்டை ஷெல் உடன் வாங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதனை தேவை ஏற்படும் சமயத்தில் மட்டும் உடைத்து பயன்படுத்துவது கூடுதலான ஆயுள் காலத்தை கொடுக்க உதவும். ஷெல்கள் அகற்றப்பட்ட, உடைத்த வால்நட்டை சேமித்து வைக்கும் போது, அவை விரைவில் காய்ந்து சுவை மற்றும் மொறு மொறுப்பை இழக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    First published:

    Tags: Kitchen Hacks, Walnut