• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீங்கள் உணவை இப்படி சாப்பிட்டால் 100 வயது வரை நோய் நொடியின்றி இருப்பீர்கள்..!

நீங்கள் உணவை இப்படி சாப்பிட்டால் 100 வயது வரை நோய் நொடியின்றி இருப்பீர்கள்..!

உணவு

உணவு

இத்தாலி, ஜப்பான். லோமா, லிண்டா , ஒக்கினாவா மற்றும் சார்டினா ஆகிய நாடுகளில் மக்கள் 100 வயதிற்கு மேலும் நோய் நொடியின்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை ரகசியம் என்ன என்பதையே ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

  • Share this:
நோய் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. ஆனால் அதற்காக நாம் எந்த அளவு முயற்சி செய்கிறோம் என்பது கேள்விக்குறியே....இது சாத்தியமற்றதா என்றால் நிச்சயம் இல்லை. அந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது இத்தாலி, ஜப்பான். லோமா, லிண்டா , ஒக்கினாவா மற்றும் சார்டினா ஆகிய நாடுகளில் மக்கள் 100 வயதிற்கு மேலும் நோய் நொடியின்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை ரகசியம் என்ன என்பதையே ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

அவ்வாறு நோயின்றி வாழும் மக்கள் இருக்கும் இடத்தை நீலப்பகுதி அதாவது புளூ சோன் என்று அழைக்கின்றனர். அந்த புளூ சோன் பகுதிக்கு சென்று அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை , உணவுப் பழக்கத்தை கவனித்துள்ளனர். அப்படி அவர்களிடையே பெரும்பான்மையான மக்கள் சாப்பிடும் உணவு வகைகளை பட்டியலிடுள்ளனர். அதை மக்களுக்காகவும் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த உணவு முறைகளை பின்பற்றினால் உங்களுக்கு ஆரோக்கியம் மேம்படலாம். முயற்சி செய்து பாருங்கள்...

Top view of a brown bowl filled with black beans shot on rustic wood table. A wooden spoon is beside the bowl with some beans on it. DSRL studio photo taken with Canon EOS 5D Mk II and Canon EF 100mm f/2.8L Macro IS USM


பயறு வகைகளை சாப்பிடுங்கள் : தினமும் குறைந்தது அரை கப் பயறு சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உங்கள் தினசரி உணவில் கருப்பு காராமணி, கொண்டைக் கடலை மற்றும் வெள்ளைக் காராமணி ஆகியவற்றைச் சேர்க்கவும். இவை தாவர வகையைச் சேர்ந்த புரதம் நிறைந்த உணவு. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளன. அதுமட்டுமன்றி உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

காய்கறிகளைச் சேர்க்கவும் : ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் இயற்கையான முறையில் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. குறிப்பாக இதயத்திற்கு நல்லது மற்றும் சில வகை புற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

நட்ஸ் வகை சிற்றுண்டி : ஒவ்வொரு நாளும் சுமார் 60 கிராம் (இரண்டு கைப்பிடிகள்) நட்ஸ் சாப்பிடுங்கள். பிஸ்தா, அக்ரூட் பருப்புகள் , வேர்க்கடலை மற்றும் பாதாம் என ஒரு கலவையாகவும் சாப்பிடுங்கள்.

நிறைய தண்ணீர் குடியுங்கள் : புளு சோனில் வாழும் மக்கள் காபி மற்றும் தேநீர் அருந்துகிறார்கள். ஆனால் அவர்களின் நீரேற்றத்தின் பெரும்பகுதி தண்ணீரிலிருந்தே பெறுகின்றனர்.



குறைவான சர்க்கரை : இந்த மக்கள் சர்க்கரையை சேர்த்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். முடிந்தவரை தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர். இதனால், நாள் முழுவதும் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் சாப்பிடுவதற்குப் பதிலாக, மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் வரும்போது மட்டுமே குறைவான சர்க்கரை அளவை எடுத்துக்கொள்கின்றனர்.

இறைச்சி குறைவாக சாப்பிடுங்கள் : அதிக தாவர அடிப்படையிலான உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும். நீங்கள் இறைச்சியை ஒரு எப்போதாவது ஒரு பகுதி உணவாக சேர்க்கலாம். அதேசமயம் அதை அடிக்கடி உட்கொள்ளக்கூடாது. பச்சை காய்கறிகள், டோஃபு மற்றும் சோயாவை புரதத்தின் ஆதாரமாக சேர்த்துக்கொள்ளுங்கள். இறைச்சி அதிகம் சாப்பிடுவதை தவிருங்கள்.

பல் இல்லாத முதியவர்களுக்கு இந்த 5 உணவுகள் மூலம் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்...

உண்ணும் உணவுக்கு நன்றியுடன் இருங்கள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் சாப்பிடுங்கள் : ஒவ்வொரு நாளும், உணவு சாப்பிடும் முன் சிறிது நேரம் ஒதுக்கி நன்றி செலுத்துங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் உணவு சாப்பிடும்போது, நீங்கள் உணவை உட்கொள்ளும் போது மகிழ்ச்சியாக உணர்வீர்கள், இது உங்கள் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



உங்கள் தாத்தா பாட்டியிடமிருந்து உதவிக்குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் : எந்தவொரு விஷயத்தையும் பற்றிய சிறந்த ஆலோசனையை பெற வேண்டுமெனில் அதைப்பற்றி அறிந்த மற்றும் அனுபவித்த ஒருவரால் மட்டுமே வழங்க முடியும். எனவே, உங்கள் தாத்தா பாட்டியுடன் அமர்ந்து சில குறிப்புகள் எடுத்துகொள்ளுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அது வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: