உணவில் தினமும் நெய் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவியாக உள்ளது. ஆனால் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிகளவில் நெய் சேர்ப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறப்படுகிறது.
பழங்காலம் தொட்டு இன்று வரை இந்திய உணவுகளின் முக்கியமானதாக உள்ளது நெய். நீங்கள் சாப்பிடக்கூடிய எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் சுவை அளிக்கும். இதோடு உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதுக்குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், வெண்ணெய்யை விட உருக்கிய சுத்தமான பசு நெய் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிமானிக்கும் திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தினமும் உணவில் நெய் பயன்படுத்தினால் உடலுக்கு நன்மையா.? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்ற கேள்விகள் அதிகளவில் உள்ளது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக நெய் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.
நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
உங்களது உணவில் நீங்கள் நெய் சேர்த்துக்கொள்ளும் போது ஏராளமான நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். குறிப்பாக காலையில் சாப்பிடும் உணவில் சிறிதளவு நெய் ஊற்றி சாப்பிடும் போது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்கிறது.
நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற சத்துக்களை வெளியேற்றவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது.
நெய்யில் உள்ள வைட்டமின்கள் ஏ,டி,இ, கே போன்ற சத்துக்கள் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், கண்பார்வை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவியாக உள்ளது. மேலும் மலச்சிக்கல், பித்தம், கப நோய்கள், சொறி முதலிய நோய்கள் குணமாகவும் தினமும் உங்களது சாப்பாட்டில் நெய் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம்.
நெய் உங்களது முகபளபளப்பிற்கும் உதவியாக உள்ளது. குறிப்பாக நாள்பட்ட நெய், மன நோய்க்குக்கூட சிகிச்சை அளிக்க உதவுவதாகவும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறதா கிரீன் டீ..? ஆய்வு சொல்லும் தகவல்
நெய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், கல்லீரல் கொழுப்பு உள்ளவர்கள் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள கொழுப்பு சத்துக்கள் உங்களது இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தெளிவான நெய்யில் அதிகளவு கொழுப்பு இருப்பதால் உடல் பருமனின் அபாயத்தை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது. இதனால் தேவையில்லாத உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

நெய் சாப்பிடுவதை யார்? எப்போது தவிர்க்க வேண்டும்?
நீங்கள் அஜீரணத்தால் அவதிப்படும் போது நெய்யைத் தவிர்க்கவும். நெய்யில் கொழுப்புகள் அதிகளவில் நிறைந்திருப்பதால் வயதனாவர்களுக்கு கொடுக்க வேண்டாம். ஒரு வேளை அவர்கள் சாப்பிடும் பட்சத்தில் இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகை செய்யும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அலர்ஜியை உண்டாக்குமா..!! மருத்துவர்கள் விளக்கம்
நெய் சாப்பிடுவது மலச்சிக்கலுக்குத் தீர்வு தரும் என்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
நெய்யில் உள்ள ஆற்றல் மிகுந்த சத்துக்கள் பல இருப்பதால் தேவையான அளவு உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.