Home /News /lifestyle /

ரத்த அழுத்தம் - கொலஸ்டிராலை குறைக்க இந்த எண்ணெயை சமையலில் சேர்த்தால் போதும்!

ரத்த அழுத்தம் - கொலஸ்டிராலை குறைக்க இந்த எண்ணெயை சமையலில் சேர்த்தால் போதும்!

அவகேடோ எண்ணெயின் பலன்கள்.

அவகேடோ எண்ணெயின் பலன்கள்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயின் தரமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Internationa, IndiaChennaiChennai
    நம்முடைய கிச்சன்கள் எண்ணெய் வகைகள் இல்லாமல் முழுமையடைவதில்லை, ஏனென்றால் நாம் எடுத்து கொள்ளும் பெரும்பாலான உணவுகளை தயாரிக்க பல எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஆனால் நாம் உட்கொள்ளும் எண்ணெய் நீண்ட காலத்திற்கு நம் ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் ஆரோக்கியமான எண்ணெய் வகைகளை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்கு சிறந்த மாற்றாக அவகேடோ ஆயில் இருக்கும்.

    அவகேடோ ஆயில் முக்கியமான சமையல் எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது, இது ஒமேகா 3 மற்றும்
    ஒமேகா 9- ன் சிறந்த மூலமாகும். இது இதயத்திற்கு ஆரோக்கியமானது, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் கே அதிகம் நிறைந்தது.

    மேலும் இந்த ஆயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பின் நல்ல மூலமாகும். இது எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்கவும், எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்களால் நிரம்பி உள்ளது.

    உங்கள் டயட்டில் அவகேடோ ஆயிலை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே...

    குற்ற உணர்ச்சியில்லா ஸ்னாக்ஸ்:

    மாலை நேரமானால் பஜ்ஜி, பகோடா, சமோசா, ஜிலேபி என வித விதமான ஸ்னாக்ஸ் சாப்பிட நாம் ஏங்குவது இயல்பானது. அவகோடா ஆயில் பயன்படுத்தி ஸ்னாக்ஸ்களை செய்து சாப்பிடுவது அதில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்து பண்புகளை நமது உடலுக்கு வழங்குகிறது.

    எண்ணெய்கள் பொதுவாக அதிக வெப்பமடையும் போது எரிகின்றன. இது புற்றுநோயை ஏற்படுத்துமளவிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால் இந்த ஆயில் அதிக ஸ்மோக் பாயிண்டை (260 degree Celsius) கொண்டுள்ளது.

    அதிக ஸ்மோக் பாயிண்ட் உள்ள ஆயில்கள் வறுக்க சிறந்த முறையில் பயன்படுகின்றன. தவிர பேக்கிங் செய்ய மற்றும் தோல் பராமரிப்பு ஸ்கின் லூப்ரிகென்ட்டாகவும் இந்த ஆயிலை பயன்படுத்தலாம்.

    ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது:

    ஒரு சமையல் எண்ணெயில் குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் இருந்தால் அது சிறந்தது. இந்த ஆயிலில் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ் மற்றும் லிமிட்டட் சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் ஆகியவை அடங்கி இருக்கின்றன.

    முன்னர் நாம் பார்த்தப்படி எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவை குறைக்கிறது. தவிர ரத்த அழுத்தத்தைக் குறைக்க அல்லது ஆரோக்கிய ரத்த அழுத்தத்தை பராமரிக்க இயற்கையான வழி அவகோடா ஆயில்.

    இந்த ஆயிலில் உள்ள அதிக அளவு வைட்டமின் ஈ, நம்  உடலில் இருந்து நச்சுகளை அகற்றி ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.

    மூட்டுகளை பாதுகாக்கிறது:

    அவகேடோ ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி வருவது மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

    அவகேடோ ஆயில் சருமத்தில் ஆழமாக ஊடுருவி ஊட்டச்சத்தை அளிக்கிறது, ஏனெனில் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒமேகா -3 மற்றும் சருமத்தை குணப்படுத்த உதவும் வைட்டமின் ஈ ஆகியவை அடங்கி இருக்கின்றன. தடிப்புத் தோல் அழற்சி, முகப்பரு, தோல் அழற்சி, ஹீட் ரேஷ் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

    ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தது:

    இந்த ஆயிலில் நோயை தடுக்கும் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடும் கரோட்டினாய்டுகள், டோகோபெரோல்கள் மற்றும் பிளான்ட் ஸ்டெரால்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளது.

    ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும்:

    அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் ஃபேட்களை கொண்ட அவகேடோ ஆயில் நம் உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை செயல்படுத்த மற்றும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த ஆயில் குறிப்பாக, ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் அளவை அதிகரிக்கும். இது நம் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் பார்வை திறனுக்கு நன்மை பயக்க கூடியவை.

    இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம்:

    அவகேடோ ஆயில் கிட்டத்தட்ட 75% ஓலிக் ஆசிட் (Oleic acid) என்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பால் ஆனது. ஓலிக் ஆசிட் (Oleic acid) நம் இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Food, Lifestyle

    அடுத்த செய்தி