Home /News /lifestyle /

குக்கரில் தாளித்து செய்யும் தக்காளி சாதம்.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

குக்கரில் தாளித்து செய்யும் தக்காளி சாதம்.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

தக்காளி சாதம்

தக்காளி சாதம்

குழந்தைகளுக்கு பிடித்த லன்ச் பாக்ஸ் ரெசிபியை தான் பார்க்க போகிறோம். குக்கரில் செய்யும் தக்காளி சாதம்.

    பொதுவாகவே குழந்தைகள் வெரைட்டி ரைஸ்களை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம், அது அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஈஸியாக இருக்கும், அதே நேரம் சாதம் , குழம்பு என தனித்தனியாக சாப்பிடுவதை விட இதுப்போன்ற ரைஸ்களை ஸ்பூனில் எளிதாக சாப்பிடலாம். இதனால் தான் லெமன் ரைஸ், பிரிஞ்சி, ஃபைரைட் ரைஸ், தக்காளி சாதம் போன்றவை குழந்தைகளின் லன்ச் பாக்ஸ் ரெசிபியில் அதிகம் இடம் பிடிக்கிறது. அதுவும் அவர்களுக்கு பிடித்தது போலவே உருளை கிழங்கு வறுவல், சிக்கன் பக்கோடா, முட்டை ஆம்லெட் , காலிஃபிளவர் பக்கோடா ஆகியவற்றை சைடிஷ்ஷாக கொடுத்தால் போது அரை மணி நேரத்தில்  காலி செய்துவிடுவார்கள்.

    அந்த வகையில் இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு பிடித்த லன்ச் பாக்ஸ் ரெசிபியை தான் பார்க்க போகிறோம். குக்கரில் செய்யும் தக்காளி சாதம். அதுவும் குழையால், உதிரி உதிரியாக பாஸ்மதி அரிசியில் செய்வது எப்படி? என பார்க்கலாம். இந்த ரெசிபி வீடியோ கவிதா சமையலறை என்ற யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ளது.

    மிளகு குழம்பு ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்!

    தேவையான பொருட்கள்:

    பாஸ்மதி அரிசி, வெங்காயம், தக்காளி, கொத்தம்மலி, புதினா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கரம் மசாலா பொருட்கள்,

    செய்முறை:

    1. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கரம்மசாலா பொருட்கள் ( பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, அன்னாச்சி பூ) ஆகியவறை சேர்த்து தாளிக்க வேடும்.

    கல்யாண வீட்டு பிரட் அல்வா.. இதை செய்வது இவ்ளோ ஈஸியா!

    2. பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நறுக்கிய, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    3. தக்காளி - வெங்காய குழைந்து வந்த பின்பு அதில் மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள வேண்டும்.



    4. இப்போது ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர்  சேர்க்க வேண்டும்.

    5. பின்பு அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான குக்கரில் தாளித்த தக்காளி சாதம் தயார்.

    6. இதனுடன் தயிர் பச்சடி அல்லது பக்கோடா வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Food recipes, Rice

    அடுத்த செய்தி