Home /News /lifestyle /

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ பொரியல் செய்ய ரெசிபி...

மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ பொரியல் செய்ய ரெசிபி...

வாழைப்பூ பொரியல்

வாழைப்பூ பொரியல்

அமாவாசையில் வாழைப்பூ பொரியல் செய்து படையல் வைத்தால் நல்லது...

வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இதில் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையானவை:

வாழைப்பூ – 2

மோர் - 2 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

துவரம் பருப்பு - 50 கிராம்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி, மோர் கலந்த தண்ணீரில் ஊற கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க... அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன?

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். அதன்பின் வாழைப்பூ, தேங்காய்த் துறுவல் வேக வைத்த பருப்பு, உப்பு போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும். வாழைப்பூ பொரியல் ரெடி...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Thai Amavasai

அடுத்த செய்தி