ஜவ்வரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் என்று விதவிதமான பாயாசம் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் ஜவ்வரிசியுடன், பாசிப்பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த பாயாசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதனை அமாவாசை தினங்களில் நைவேத்தியமாக செய்து படைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு – அரை கப்
சிறு ஜவ்வரிசி – கால் கப்
தண்ணீர் – 3 கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – கால் கப்
முந்திரிப் பருப்பு – 10,
திராட்சை – 2 ஸ்பூன்,
காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப்,
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை :
முதலில் அரை கப் அளவிற்கு பாசிப்பருப்பை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் நன்கு ஊறிய பிறகு ஜவ்வரிசி கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை அப்படியே இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். 5 விசில் வரை மூடி போட்டு நன்கு குழைய வேக விடவும். அதன் பிறகு வெல்லப்பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க... அமாவாசைக்கு சேர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன?
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து நெய் தேவையான அளவிற்கு ஊற்றி காய விடுங்கள்.
நெய் நன்கு காய்ந்ததும் அதில் முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வறுத்து எடுங்கள், பின் காய்ந்த திராட்சைகளையும் இதே போல வறுத்து எடுங்கள். வாணலியில் இருக்கும் நெய்யில் நீங்கள் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி கலவையை ஊற்றிக் கொள்ளுங்கள்.
அதனுடன் நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் காய்ச்சிய வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். கொதி வந்ததும் அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் நன்கு கொதிkகும் போது நெய்யில் வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சைகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு கலந்து விட்டால் பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் ரெடி...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.