Home /News /lifestyle /

தயிர் சிக்கன் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா?

தயிர் சிக்கன் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா?

தயிர் சிக்கன்

தயிர் சிக்கன்

தயிர் சிக்கன் கிரேவி சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு தயிர் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் |

    தயிர் சிக்கன் கிரேவி அல்லது  தஹி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    நெய் - 5 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 1 பெரிய துண்டு

    பெரிய வெங்காயம் -2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 1 கப்

    சிக்கன் - 1/2 கிலோ

    உப்பு - சுவைக்கேற்ப

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 2 டீஸ்பூன்

    காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - ஒரு கையளவு



    செய்முறை:

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.  பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.  பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    மேலும் படிக்க... கம கமக்கும் நெய் சாதம்... குக்கரில் செய்வது எப்படி?

    இப்போது சிக்கன் நன்றாக வெந்துவிடும். வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் ரெடி...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chicken Recipes, Food

    அடுத்த செய்தி