Home /News /lifestyle /

நீங்கள் தேநீர் பிரியரா..? வீட்டிலேயே செய்யக்கூடிய விதவிதமான தேநீர் ரெசிபிகள்..!

நீங்கள் தேநீர் பிரியரா..? வீட்டிலேயே செய்யக்கூடிய விதவிதமான தேநீர் ரெசிபிகள்..!

தேநீர்

தேநீர்

காலையில் மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தேநீர் தான் ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கும் பானமாக இருக்கிறது. சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன.

மேலும் படிக்கவும் ...
சமீபத்தில் தான் சர்வதேச தேநீர் தினம் கொண்டாடப்பட்டது. காலையில் மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தேநீர் தான் ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கும் பானமாக இருக்கிறது. சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன. நீங்கள் வழக்கமாக குடிக்கும் டீ வகைகளைத் தவிர்த்து வேறு சில எளிதான தேநீர் வகைகளை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் செய்யக்கூடிய எளிமையான, சுவையான தேநீர் ரெசிபிகள் இங்கே:

வெண்ணிலா சாய் லாட்டே:

மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் தேநீர் வகைகளில் வெண்ணிலா டீ மிகவும் பிரபலமானது. வித்தியாசமான சுவையுடன் வெண்ணிலாவின் நறுமணமும் சேர்ந்த அற்புதமான பானம். நீங்கள் வீட்டிலேயே சுவையான வெண்ணிலா சாய் லாட்டேவை தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சாதாரண டீத்தூள் / வெண்ணிலா டீத்தூள்
வெண்ணிலா சுவையில் கிரீமர்
தூளாக்கப்பட்ட பட்டை, லவங்கம் மற்றும் ஜாதிபத்திரி
பால், தண்ணீர் மற்றும் சர்க்கரை

தண்ணீரில் டீத்துளை கொதிக்கவைத்து, தண்ணீர் கொதித்து வரும்போது பால், சர்க்கரை மற்றும் மசாலா பொடிகளை சேர்த்து வடிகட்டி, பின்பு கிரீமர் சேர்த்தால், சுவையான வெண்ணிலா சாய் லாட்டே தயார்.



இஞ்சி புதினா தேநீர்:

வழக்கமான தேநீர் செய்யும் பொழுது இஞ்சி சேர்ப்பது பலருக்கும் பிடிக்கும். இஞ்சி சேர்ப்பது தனித்துவமான நறுமணம் சுவையையும் கொடுக்கும். அதேபோல புதினா தேநீர் மிகவும் புத்துணர்ச்சியான பானம் ஆகும். இந்த இரண்டையும் சேர்த்து புத்துணர்ச்சி ஊட்டும் மற்றும் ஆரோக்கியமான தேநீர் வகையை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இது வயிறு உப்பசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு ஆகியவற்றுக்கு தீர்வாகவும் அமைகிறது.

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள்
துருவிய இஞ்சி
டீ தூள் அல்லது டீபேக்
பால், தண்ணீர் மற்றும் சர்க்கரை

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் துருவிய இஞ்சி மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து பின்னர் டீத்தூள் சேர்க்கவும். இந்த கலவை கொதித்து வரும்போது பால் சர்க்கரை சேர்த்து வடிகட்டி சூடாக பருகவும்.



கேரமல் தேநீர்:

பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கலாம். ஆனால், காஃபி முதல் சாக்லேட் வரை எல்லாவற்றிலும் பொருந்தும் கேரமலின் சுவைக்கு தேநீரும் விதிவிலக்கல்ல.

கேரமல் மற்றும் பிளாக் டீ கலவை அற்புதமான பானத்தை உருவாக்கும். வழக்கமான தேநீர் அல்லாமல், கொஞ்சம் ‘ரிச்சான’ சுவையில் கேரமல் தேநீர் ரெசிபி இங்கே.

எவ்வளவு காஃபி குடிக்கிறோம் என்பதை ஏன் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்..?

தேவையான பொருட்கள்:

பிளாக் டீ இலைகள் அல்லது பேக்ஸ்
கேரமல்
பட்டை, லவங்கம், ஏலக்காய்
பொடித்த மிளகு
துருவிய இஞ்சி
பால், சர்க்கரை மற்றும் தண்ணீர்

வழக்கமாக தேநீர் தயாரிக்கும் முறையில், கூடுதலாக கேரமல் சேர்த்தால், கேரமல் பிளாக் டீ தயார்!



டீடாக்ஸ் டீ:

சமீபகாலமாக டீடாக்ஸ் உணவுகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுவையான டீடாக்ஸ் டீயை நீங்கள் வீட்டிலேயே தயார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துளசி
லவங்கம்
பொடித்த மிளகு
பிளாக் டீ இலைகள் அல்லது பேக்ஸ்
பெருங்காயம்
தண்ணீர்
கல் உப்பு

மேலே உள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, சூடாகப் பருகவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Tea

அடுத்த செய்தி