Home /News /lifestyle /

வீட்டில் பூக்களை வைத்து டீ போடும் நடிகை நீலிமா ராணி!

வீட்டில் பூக்களை வைத்து டீ போடும் நடிகை நீலிமா ராணி!

நீலிமா ராணி வீட்டு டீ

நீலிமா ராணி வீட்டு டீ

கொரோனா லாக் டவுண் காலத்தில் யூடியூப் சேனல் தொடங்கிய பிரபலங்களில் இவரும் ஒருவர்.

  சின்னத்திரை நடிகை நீலிமா ராணி அவரின் வீட்டில் செய்யும் ஸ்பெஷல் ரோஸ் டீ, செம்பருத்தி டீ பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.

  டீக்கு அடிமை யாரெல்லாம் என்று கணக்கிட்டு பார்த்தால் குடும்பத்துக்கு ஒருவராது சேர்த்துவிடுவார்கள்.அந்த அளவுக்கு டீ மீது நம்ம ஊர் மக்களுக்கு அலாதி பிரியம். வயது பேதமில்லாமல் சிறுவயது பிள்ளைகள் முதல் வளர்ந்த பெரியவர்கள் வரை அனைவருக்கும் டீ பிடித்தமான பானமாக உள்ளது. டீயில் பல வகை உண்டு. க்ரீன் டீ, இஞ்சி டீ, மசாலா டீ, ஸ்பெஷல் டீ, மலாய் டீ என அடுக்கி கொண்டே போகலாம். வெயிட் காண்ஷியஸ் உள்ளவர்கள் பெரும்பாலும் க்ரீன் டீ மற்றும் லெமன் டீயை அதிகம் நாடுகின்றனர். நம் இல்லத்தரசிகள் கூட வீட்டிலிருக்கும் நேரம் முழுவதும் சாப்பிடுவதை தவிர்த்து டீ அதிகம் குடிப்பதையே விரும்புகிறார்கள்.

  அந்த நேரத்தில் பசி எடுத்தாலும் ஒரு டீயோடு அன்றைய உணவு வேளை முடிந்துவிடுகிறது. இவை தொடர்ந்து அதிகரிக்கும் போது தண்ணீர் குடிக்க தாகம் எடுத்தால் கூட டீ கடையை நோக்கிதான் ஓடுகிறார்கள்.இவை நல்லது என்றால் கட்டாயம் இல்லை. அதிகளவு டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பல. வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல்வேறு உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடும். டீ குடிக்க வேண்டும், அதுவும் சத்தாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீலிமாவின் இந்த ஃபிளவர்ஸ் டீயை ட்ரை செய்து பாருங்கள். சருமத்திற்கும் நல்லது, உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

  சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை பகிர்ந்த சின்னத்திரை நடிகை நீலிமா ராணி ’நீல்ஸ்’ என்று தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கொரோனா லாக் டவுண் காலத்தில் யூடியூப் சேனல் தொடங்கிய பிரபலங்களில் இவரும் ஒருவர். தற்போது சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு முழு நேரமாக தனது யூடியூப் சேனலில் பிஸியாகி விட்டார். இந்த சேனலில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ தான் ஃபிளவர்ஸ் ஸ்பெஷல் டீ.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரோஜா பூ டீ மற்றும் செம்பருத்தி டீ என இரண்டு ஸ்பெஷல் வகையான் டீ செய்முறை பற்றி இந்த வீடியோவில் நீலிமா விளக்கியுள்ளார். அவர் தினமும் தனது வீட்டில் இதுப்போன்ற டீயை தான் அதிகம் குடிப்பாராம். சருமத்திற்கு நல்ல பொலிவையும் இந்த வகையான டீ தருமாம். முதலில் செம்பருத்தி டீ. தண்ணீரை சுடவைத்து, அதில் செம்பருத்தி பூக்களைக் கிள்ளி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதன் சாறு இறங்கும் வரை காத்திருக்கவேண்டும். பூவின் நிறம் சிவப்பிலிருந்து வெங்காயத்தோல் நிறத்துக்கு மாறும். இந்த நிலைக்கு வந்தபிறகு, டீயை வடிகட்டி அதனோடு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.  அடுத்தது ரோஸ் டீ, இதை செய்வதற்கு ஒரு கப் தண்ணீரில் ரோஜா இதழ்களைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும். ரோஜாவின் நிறம் மாறும் வரை காத்திருந்து பிறகு அதனை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்க்காமல் குடிப்பது தான் மிகவும் நல்லதாம். இதில் பெண்களுக்கான ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளதாம். நீங்களும் உங்கள் வீடுகளில் இதை ட்ரை செய்து பாருங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Food recipes

  அடுத்த செய்தி