டீ கடை வெங்காய போண்டா செய்வது எப்படி?

வெங்காய போண்டா

டீக்கடைகளில் டீ உடன் சேர்த்து பேப்பரில் பஜ்ஜியும், போண்டாவும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதை பார்க்கும் போது நமக்கும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை தூண்டி விடும் அளவிற்கு இருக்கும். மொறு மொறுவென்று வெங்காய போண்டா உடன் டீ குடித்தால் பசி எல்லாம் பறந்து போகும். அந்த வெங்காய போண்டாவை பத்து நிமிடத்தில் வீட்டிலேயே நாம் எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....

  • Share this:
மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள் 

கடலை மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

மைதா மாவு - 4 ஸ்பூன்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவுசெய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீ கடை வெங்காய போண்டா ரெடி.

மேலும் படிக்க... இனி தினமும் உங்கள் முதல் உணவு இப்படி இருக்கட்டும்...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...

காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி..
Published by:Vaijayanthi S
First published: