முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெங்காய போண்டா.. டீ கடை ஸ்டைலில் செய்ய ரெசிபி..!

வெங்காய போண்டா.. டீ கடை ஸ்டைலில் செய்ய ரெசிபி..!

போண்டா

போண்டா

evening snacks | மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டீக்கடைகளில் டீ உடன் போண்டா சாப்பிடும் இன்பம் அலாதியானது. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் மாலையில் மொறு மொறுவென்று வெங்காய போண்டா உடன் டீ குடித்தால்  எல்லாம் பறந்து போகும். அந்த வெங்காய போண்டாவை செய்வது அவ்வளவு சிரமம் இல்லை. பத்து நிமிடத்தில் வீட்டிலேயே நாம் எப்படி செய்வது என்பதை இந்த தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

மைதா மாவு - 4 ஸ்பூன்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.

4. இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீ கடை வெங்காய போண்டா ரெடி.

First published:

Tags: Evening Snacks