மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு மற்றும் சூப் வகைகளை செய்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.... அந்த வகையில் இன்ரு மிளகு சூப் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு மற்றும் சூப் வகைகளை செய்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்.... அந்த வகையில் இன்ரு மிளகு சூப் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மழையோ வெயிலோ நம்மை எதுவும் செய்யாது. பருவத்துக்கு ஏற்ற வகையிலும் உணவுப் பழக்கம் இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் மழைக்காலத்துக்கு உகந்த வகையில் மிளகு, தூதுவளை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவு மற்றும் சூப் வகைகளை செய்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும்....
தேவையான பொருட்கள்
கொரகொரப்பாக
அரைத்த மிளகு – 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்
பூண்டுப் பல் – 3
தக்காளி – 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
நெய் – அரை டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் அரிந்த வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். பின்பு மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள். இப்போது மழைக்கு இதமான மிளகு சூப் தயார்...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.