Home /News /lifestyle /

பேரிக்காயில் இத்தனை வகை உணவுகள் சமைக்கலாமா..? ரெசிபி மட்டுமல்ல அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க

பேரிக்காயில் இத்தனை வகை உணவுகள் சமைக்கலாமா..? ரெசிபி மட்டுமல்ல அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காயில் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கின்றன. இதுவும் ஆப்பிளை போன்றவை தான். ஆனால், சுவை மற்றும் பலன்களில் ஆப்பிள் அளவுக்கு வர முடியாது.

பேரிக்காயை ஆங்கிலத்தில் பியர் என்று சொல்கின்றனர். அந்த வார்த்தை லத்தீன் மொழியின் பெரா அல்லது பிரா என்ற சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் விளைவிக்கப்படுகிறது. மரங்களில் காய்க்கும் இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைகாலத்திற்கு பிந்தைய மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்றன.

பொதுவாக பேரிக்காய் என்பது தென்கிழக்கு ஐரோப்பியத்தை பூர்விகமாக கொண்ட பழமாகும். பழங்கால கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் விருப்பத்திற்கு உரிய பழமாக இருந்துள்ளது. இனிப்பும், நிறைய நீர்ச்சத்தும் கொண்ட பேரிக்காய் பழங்களை கடவுளின் பரிசு என்று கிரேக்க எழுத்தாளர்கள் வர்ணிக்கின்றனர்.

பேரிக்காயில் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கின்றன. இதுவும் ஆப்பிளை போன்றவை தான். ஆனால், சுவை மற்றும் பலன்களில் ஆப்பிள் அளவுக்கு வர முடியாது. அதேசமயம், ஆப்பிளில் இருக்கும் பெக்டின் என்ற சத்து பேரிக்காயிலும் இருக்கிறது. நமது குடலில் உள்ள பாக்டீரியாவை ஒழிக்க அது உதவிகரமாக இருக்கிறது.

பேரிக்காய் மூலம் கிடைக்கும் பலன்கள்

நம் உடலில் புண்கள் குணமாகும் வேகத்தை பேரிக்காய் அதிகரிக்கிறது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது பேரிக்காய் ஆகும். நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக் கூடியது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு இதை வரப்பிரசாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடியது.

மிகுந்த நார்ச்சத்து கொண்ட பேரிக்காய் என்பது வயோதிகத்தை தடுக்கிறது. உடலில் உள்ள எலும்புகளுக்கு வலுவூட்டும் தன்மை இதில் இருக்கிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த பேரிக்காயை கொண்டு தயார் செய்யப்படும் ரெசிபிகள் குறித்து இங்கு காண்போம்.தேன், மிளகு கலந்த சிக்கன் மற்றும் பேரிக்காய்

தேவையான பொருட்கள்:

எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - 400 கிராம்
லேசாக பழுத்த பேரிக்காய் நறுக்கியது - 400 கிராம்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு மற்றும் மிளகு - தேவையான அளவு
கடுகு பேஸ்ட் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ஒயின் அல்லது வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. தேவையான பொருட்களை சேர்த்து சிக்கனை மெரினேட் செய்து வைக்கவும்.
2. இப்போது சிக்கனுடன் பூண்டு, வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து வேக வைக்கவும்.
3. சிக்கன் நன்றாக வெந்த பிறகு அதனுடன் பேரிக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
4. இறுதியாக மிளகு தூள், தேன் உள்ளிட்டவற்றை கார்னிஷ் செய்து சூடாக பரிமாறவும்.பேரிக்காய் போமா சல்சா

தேவையான பொருட்கள்:

பேரிக்காய் - 3 நறுக்கியது
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - இரண்டு
பூண்டு - 2
வெங்காயம் - 2 நறுக்கியது.
புதினா இலை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
வெள்ளை ஒயின் அல்லது வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு மற்றும் மிளகு - தேவையான அளவு
மாதுளம்பழ விதைகள் - ½ கப்

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் பூண்டு, வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கவும்.
* இதில் பேரிக்காய் மற்றும் கொத்தமல்லி, கறிவேப்பிலை, மசாலா பொருள் சேர்த்து வதக்கவும்.
* 2 அல்லது 3 நிமிடம் வேக வைத்த பிறகு ஒயின் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும். இறுதியாக மாதுளம்பழ விதைகளை சேர்த்து பரிமாறவும்.

நீங்கள் சமைக்கும் சிக்கனை டெண்டர் மற்றும் ஜூசியாக மாற்றுவது எப்படி..?நட்டி பேக்டு பேரிக்காய் போட்ஸ்

பேரிக்காய் - அரை கிலோ
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரக தூள் - ¼ ஸ்பூன்
வெந்தய தூள் - ¼ ஸ்பூன்
உப்பு மற்றும் மிளகு - தேவையான அளவு
சாட் மசாலா - ¼ ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
பட்டர் - 1 ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 3 நறுக்கியது
வால்நட் - ¼ கப்
காப்சியம் - ¼ கப்

செய்முறை

* பேரிக்காயை இரண்டாக வகுந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் மசாலா கலவையை நிரப்பி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* எண்ணெய் சூடேற்றி அதில் பூண்டு, வெங்காயம், மிளகாய் அல்லது கேப்சியம் ஆகியவை சேர்த்து வதக்கி, பின்னர் உப்பு, மிளகத்தூள் மற்றும் இதர மசாலா பொருட்களை சேர்க்கவும்.
* இதில் வால்நட் மற்றும் க்ரீம் சீஸ் போன்றவற்றை சேர்க்கவும்.
* இந்த கலவையை பேரிக்காயில் நிரப்பி ஆவி மூலமாக வேக வைக்கவும்.
பிறகு சாஸ் கலவையில் கலந்து சூடாக சாப்பிடலாம்.பேரிக்காய் மற்றும் அவகோடா சாலட்

சாலட்டின் அடிப்பகுதிக்கு ஐஸ்பெர்க் லெட்டூஸ் - 1 கப்
பேரிக்காய் - 3 நறுக்கியது
அவகோடா - 2 நறுக்கியது
கிரீன் ஆப்பிள் - 1 நறுக்கியது
வால்நட் - 3 ஸ்பூன்
உலர் திராட்சை - 3 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்
வினிகர் - 2 ஸ்பூன்
தேன் - 3 ஸ்பூன்
சப்ஜா விதைகள் - 2 ஸ்பூன்

செய்முறை

சாலட்டிற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுலில் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும், பின்னர் கூலிங் செய்யவும். சாலட் மீது சப்ஜா விதைகள், தேன் சேர்த்து பரிமாறவும்.பேரிக்காய் கோலடா

தேவையான பொருட்கள்:

பேரிக்காய் - 3 நறுக்கியது
சர்க்கரை - ½ கப்
தண்ணீர் - ½ கப்
தேன் - 1 ஸ்பூன்
வாழைப்பழம் - 1
பாதாம் பருப்பு - 3 ஸ்பூன்
முந்திரி - 3 ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய் தண்ணீர் - ¼ கப்
புதினா இலை, சப்ஜா விதைகள் தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் பேரிக்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து வேக வைகக்வும்.
ஒரு ஜாரில் வாழைப்பழம், தயிர், பாதம் போன்றவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக இளநீர் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும்.சீஸ் பேரிக்காய் பார்

தேவையான பொருட்கள்

பேரிக்காய் - 4 நறுக்கியது
வெல்லம் - 1 கப்
சாக்லேட் பிஸ்கட் - 1 கப்
ஏலக்காய் பவுடர் - ¼ ஸ்பூன்
க்ரீம் சீஸ் - ¼ கப்
பதப்படுத்திய பால் - 3 ஸ்பூன்
பாதம் / பிஸ்தா / திராட்சை - 3 ஸ்பூன்
புதினா / செர்ரி - தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்கள் மற்றும் பேரிக்காய் எடுத்துக் கொள்ளவும்.
பதப்படுத்திய பால், சீஸ் உள்ளிட்டவை சேர்த்து பிசையவும்.
பாத்திரத்தில் பட்டர் சேர்த்து, சக்கரை உள்ளிட்டவை சேர்த்து காய்ச்சவும். இதனுடன் ஏலக்காய், பிஸ்கட் தூள் போன்றவற்றை சேர்க்கவும்
நட்ஸ் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து கிளறிய பிறகு இறக்கி வைக்கவும். ஆறிய பிறகு கூலிங் செய்து ஜில்லென்று பரிமாறவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fruits

அடுத்த செய்தி