ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பன்னீர் டிக்கா செய்ய ரெசிபி...

பன்னீர் டிக்கா செய்ய ரெசிபி...

குறிப்பாக பனீரில் செலினியம் மற்றும் பொட்டாசியம் நிறைவாக உள்ளன. இது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்னதான் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போனாலும் அமிர்தமும் நஞ்சுதானே... எனவே பனீரை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பல உடல் நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடும். அப்ப்டி என்னென்ன பக்கவிளைவுகளை சந்திப்பீர்கள் என்று பார்க்கலாம்.

குறிப்பாக பனீரில் செலினியம் மற்றும் பொட்டாசியம் நிறைவாக உள்ளன. இது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்னதான் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போனாலும் அமிர்தமும் நஞ்சுதானே... எனவே பனீரை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பல உடல் நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடும். அப்ப்டி என்னென்ன பக்கவிளைவுகளை சந்திப்பீர்கள் என்று பார்க்கலாம்.

சுவையான பன்னீர் டிக்கா செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும். இத்தகைய பன்னீரில் டிக்கா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

பன்னீர் - 250 கிராம்

தயிர் - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2/ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

சீரகத் தூள் - 1 ஸ்பூன்

சோம்பு - 1/2 ஸ்பூம்

எண்ணெய் - தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்

தனியா தூள் - 1/2 ஸ்பூன்

குடை மிளகாய் - 2 சதுரமாக நறுக்கியது

வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கியது

தக்காளி - 1 சதுரமாக நறுக்கியது

மூங்கில் குச்சி - தேவையான அளவு.

 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து  கொள்ளவும்.

பின்பு கடலை மாவு சேர்த்து அதனுடன் சதுர வடிவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை 1/2 மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து சிறிய மூங்கில் குச்சிகளை கொண்டு சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சொருகி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

 

மேலும் படிக்க... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாலக் பன்னீர்

பின்னர் தோசை கல்லை வைத்து நன்றாக சூடானதும் குச்சியில் சொருகி வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவைக்க வேண்டும். இவ்வாறு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பன்னீர் டிக்கா  தயார்.

மேலும் படிக்க...குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கு ஆம்லட்

First published:

Tags: Food, Paneer