Home /News /lifestyle /

சுவையான பக்கோடா செய்ய ரெசிபி...

சுவையான பக்கோடா செய்ய ரெசிபி...

பக்கோடா

பக்கோடா

Onion Pakkoda Recipe | இன்ஸ்டன்ட் உணவு வகைகளின் மீதும் இன்றைய தலைமுறையினருக்கு அதிக ஆர்வம் உண்டு. உடனே செய்து உடனே சாப்பிட வேண்டும். இப்படி ஆர்வமுள்ள அனைவரும் தினம் ஒரு சுவை வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்..

மேலும் படிக்கவும் ...
    வீட்டில் செய்யும் உணவுகளை விட கடைகளுக்கு சென்று வாங்கி சாப்பிடும் உணவுகளின் மீது தான் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் வீட்டில் சுவையான பக்கோடா செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 2௦௦ கிராம்

    அரிசி மாவு - 50 கிராம்

    வெங்காயம் - 25௦ கிராம்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பூண்டு - 1

    பச்சை மிளகாய் - 5

    நெய் - 5௦ கிராம்

    சோம்பு - 1௦ கிராம்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவையான அளவு

    பக்கோடா


    செய்முறை:

    முதலில் வெங்காயத்தை மெல்லிய அகன்ற துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். நெய்யை உருக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றைஎடுத்துக் கொள்ளவும். அத்துடன் கடலை மாவு, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை அரிசி மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.

    மேலும் படிக்க... 

    Ajwain Water: பெண்களுக்கான அதிசய பானம் ஓமம் கலந்த தண்ணீர்...

    சமையலறைக்கு தேவையான சின்ன சின்ன டிப்ஸ்... இதோ...

    அதன் பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய கலவையை உதிரி உதிரியாக போடவும். பொன்நிறமாக சிவந்து வரும் வரை வறுக்கவும். அதன் பின்னர்  சூடாக பரிமாறலாம். சுவையான வெங்காய பக்கோடா ரெடி.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Food

    அடுத்த செய்தி