• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கமகமக்கும் மதுரை கறி தோசை... இதோ ரெசிபி!

கமகமக்கும் மதுரை கறி தோசை... இதோ ரெசிபி!

மட்டன் தோசை

மட்டன் தோசை

மதுரை மீனாட்சி, மல்லி, ஜிகிர்தண்டா என பெருமைகள் பல நீண்டாலும் மதுரை ஹோட்டல்களில் கிடைக்கும் கறி தோசையின் ருசியே தனி. அதனை எளிதாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • Share this:
மதுரை சைவத்தை விட அசைவத்திற்கு தான் பிரசித்தி. அதுவும்  மட்டன் கறியை மைய சமைத்து அதை தோசை மாவுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவி கமகமன்னு சமைக்கும் போதும் வரும் வாசனையே தனிதான். இந்த கறி தோசையை வீட்டிலே எளிமையாக சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

1. மட்டன் கொத்து கறி – 200 கிராம்

2. தோசை மாவு – ஒரு கப்

3. வெங்காயம் – தக்காளி தலா 1

4. முட்டை – 3

5. இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்

6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

7.மல்லி தூள் – 3/4 ஸ்பூன்

8.கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

9, மிளகு தூள் – 1 ஸ்பூன்

10.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

11. சீரகதூள் – 1/2 ஸ்பூன்

12.எண்ணெய் – 3 ஸ்பூன்

13.கடுகு

14. சோம்பு

15. உப்பு

செய்முறை:

முதலில் மட்டனை மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, முட்டையை உடைத்து ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து உப்பு சேர்க்காமல் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு, வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கிரேவி போல் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், அடுப்பை குறைத்து வைத்து தோசை மாவை ஊத்தப்பம் போல் ஊற்ற வேண்டும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.

மேலும் படிக்க... வெந்தய கீரை கோழி குழம்பு எப்படி செய்வது?

பின்பு, அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பின்பு, மிளகு தூளை பரபரவென தூவி , அதிகளவு எண்ணெய்யை சுற்றி ஊற்றி, கொத்தமல்லியை தூவி, திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.. 1 நிமிடம் கழித்து எடுத்தால், கமகமக்கும் மதுரை கறி தோசை ரெடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: