ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்கு இதமான மாலை நேர ஸ்நாக்ஸ்... மசாலா பஜ்ஜி செய்ய ரெசிபி

மழைக்கு இதமான மாலை நேர ஸ்நாக்ஸ்... மசாலா பஜ்ஜி செய்ய ரெசிபி

மசாலா மிளகாய் பஜ்ஜி

மசாலா மிளகாய் பஜ்ஜி

பஜ்ஜி என்று சொன்னாலே பெண் பார்க்கும் படலம் தான் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இந்த சுவையான மொறுமொறு பஜ்ஜியை இப்படி செஞ்சு பாருங்க, செம டேஸ்டா இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஜ்ஜிக்கு மயங்காத மனிதர்களே இருக்க முடியாது. விசேஷம் என்றாலும் பஜ்ஜி, விழா என்றாலும் பஜ்ஜிதான் செய்வார்கள்.. அது மட்டுமல்லாமல் பஜ்ஜி என்று சொன்னாலே பெண் பார்க்கும் படலம் தான் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இந்த சுவையான மொறுமொறு பஜ்ஜியை இப்படி செஞ்சு பாருங்க, செம டேஸ்டா இருக்கும்.

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 கப்

பஜ்ஜி மிளகாய் - 6

வெங்காயம் - 2

வரமிளகாய் - 2

புளி - சிறிது

பூண்டு - 4 பல்

அரிசி மாவு - 1/2 கப்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

சோடா உப்பு - 1 சிட்டிகை

பெருங்காயத் தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

1. வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

4. மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

5. அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் முன்னும் பின்னும் பிரடி எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

6. இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான மசாலா மிளகாய் பஜ்ஜி தயார்.

First published:

Tags: Evening Snacks, Food