முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாவடு ஊறுகாய்.. நொடியில் செய்ய ரெசிபி..!

மாவடு ஊறுகாய்.. நொடியில் செய்ய ரெசிபி..!

மாவடு ஊறுகாய்

மாவடு ஊறுகாய்

Maavadu Pickle Recipe | மாவடு மாங்காய் ஊறுகாயை அருமையாக செய்திட ஈஸியான ரெசிபி..

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடைக்காலத்தில் அதிகளவில் மாவடு கிடைக்கும். இதனை வடு மாங்காய் என்றும் கூறுவார்கள். அத்தகைய மாவடுவைக் கொண்டு காரசாரமான ஊறுக்காய் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மாவடு – ஒரு கிலோ

பொடி செய்த கல் உப்பு- தேவையான அளவு

மிளகாய்த்தூள் – 50 கிராம்

கடுகு – 2 டீஸ்பூன்

விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

1. மாவடுவை காம்பு நீக்கி நன்கு கழுவி, சுத்தமான துணியில் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் நிழலில் காய வைக்க வேண்டும்.

2. மா வடு நன்கு உலர்ந்த பின்பு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் கலக்க வேண்டும். அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

3. அதன் பின்னர் வறுத்துப் பொடித்த கடுகு, மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து விட வேண்டும். எல்லாம் நன்கு கலந்த பின் குலுக்கிவிட வேண்டும்.

4. இதில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. உப்பில் உள்ள தண்ணீரே போதுமானது. இதை அடிக்கடி குலுக்கிவிட வேண்டும். இதை காரம் சேர்க்காமலும் செய்யலாம். நல்ல காரம் வேண்டும் என்றால் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

5. குறைந்தது ஒரு வாரம் இந்த மாவடு கலவையை நன்றாக மூடி ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு திறந்து பார்த்தால் சுவையான காரசாரமான மாவடு ஊறுகாய் ரெடி.

6. தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மாவடு மாங்காய் ஊறுகாய்.

First published:

Tags: Mango, Pickle