முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

தேங்காய் சட்னி : தேங்காய் சட்னி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது, தேங்காய் சட்னியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. இது நன்கு விளைந்த தேங்காய், சிவப்பு மிளகாய், கொத்தமல்லி இலைகள் மற்றும் கடுகு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. தேங்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது வளர்சிதை மாற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளையும் தடுக்கிறது. எனவே தேங்காய் சட்னியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

தினமும் காலை உணவுக்கு தேங்காய் சட்னி இல்லாத வீடுகளே இருக்காது... அத்தகைய தேங்காய் சட்னியை மிகவும் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Last Updated :

தேங்காய் சட்னி தோசை, இட்லி, வடை மற்றும் உத்தபம் போன்ற உணவுகளுக்கு சரியான தொட்டுக்கொள்ளும் சைடிஷ் ஆகும். இந்த தேங்காய் தென்னிந்திய மக்களால் விரும்பி சாப்பிடப்படுப்படுகிற ஒரு உணவு. தினமும் காலை உணவுக்கு தேங்காய் சட்னி இல்லாத வீடுகளே இருக்காது... அத்தகைய தேங்காய் சட்னியை மிகவும் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

முழு தேங்காய் - 1

பச்சை மிளகாய் - 3-4

சீரகம் - ½ தேக்கரண்டி

வறுத்த கடலை - 2 டீஸ்பூன்

முந்திரி பருப்புகள் - 6-8

இஞ்சி - 1 அங்குலம்

சுவைக்கு தேவையான அளவு உப்பு

எலுமிச்சை சாறு

வறுப்பதற்கு

தேங்காய் எண்ணெய்

கடுகு -1 தேக்கரண்டி

சிறிது வெந்தயம்

உலுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

ஒரு மிக்ஸியில் , தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், வறுத்த கடலை, முந்திரி பருப்பு, இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு இதையும் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுதை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தளித்து அரைத்ததையும் சேர்த்து ந்ன்றாக கலக்குங்கள்... இப்போது சுவையான தேங்காய் சட்னி ரெடி... இந்த தேங்காய் சட்னியுடன் இட்லி தோசையை சாப்பிடலாம்...

மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்திக்கு வாங்கின பொரி மீதம் இருக்கிறதா? கவலைய விடுங்க...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...

காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி..

First published:

Tags: Chutney, Food