ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காரசாரமான கோல்கொண்டா சிக்கன் ரெசிபி செய்வது எப்படி?

காரசாரமான கோல்கொண்டா சிக்கன் ரெசிபி செய்வது எப்படி?

கோல்கொண்டா சிக்கன்

கோல்கொண்டா சிக்கன்

மழைக்காலங்களில் இந்த கோல்கொண்டா சிக்கன் சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை சரியாக கடைப்பிடித்து சிக்கனை சமைத்து மகிழுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கனை பயன்படுத்தி நமக்கு பிடித்த பல விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். அதிலும் முக்கியமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சுவையிலும் விதவிதமான முறையிலும் சிக்கன் சமைக்கப்படுகிறது.

இந்தியாவின் தக்காண பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோல்கொண்டா சிக்கன் ரெசிபியை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். முக்கியமாக மசாலாக்கள் நிறைந்த காரமான சுவையை அனுபவிக்க விரும்பும் மசாலா பிரியர்களுக்கு இந்த கோல்கொண்டா சிக்கன் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். போன்லெஸ் சிக்கனை விதவிதமான மசாலாக்கள் மற்றும் மூலிகைகளோடு சேர்த்து டீப் ப்ரை செய்து, அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் தயிர், பூண்டு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து இந்த கோல்கொண்டா சிக்கன் சமைக்க முடியும். முக்கியமாக மழைக்காலங்களில் இந்த கோல்கொண்டா சிக்கன் சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை சரியாக கடைப்பிடித்து சிக்கனை சமைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் - 120 கிராம்

சோளமாவு - 30 கிராம்

உப்பு -  தேவையான அளவு

பச்சை மிளகாய் - 10

இஞ்சி - 100 கிராம்

கறிவேப்பிலை – 3

தயிர் - 80 கிராம்

மல்லி தூள் - ½ டீஸ்பூன்

வெங்காயம் - 50 கிராம்

கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்

முட்டை - 1

சுத்திகரிக்கப்படாத மைதா - 20 கிராம்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 100 கிராம்

கொத்தமல்லி இலைகள் - 50 கிராம்

சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்

சாட் மசாலா ½ டீஸ்பூன்

சூரியகாந்தி எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

(தேவைபட்டால் விருப்பத்திற்கேற்ப நிறமியை சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை:

சிக்கனை கழுவி மசாலாக்கள் சேர்க்க வேண்டும்:

சிக்கனை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பின்பு அதில் உள்ள நீரை வடிகட்டி சிக்கனை வேறொரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை அதனுடன் சேர்க்க வேண்டும். பின்பு ஏற்கனவே எடுத்து வைத்த சோள மாவு, சுத்திகரிக்கப்படாத மைதா, உப்பு, கருப்பு, மிளகு மற்றும் நிறமி ஆகியவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

சிக்கனை அரை மணி நேரம் வரை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்

இப்போது சிக்கனுடன் முட்டையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். வேண்டுமென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு சிக்கனை எடுத்து அரை மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

சிக்கனை பொரிக்க வேண்டும்

தற்போது எண்ணையை நன்றாக சூடு படுத்தி சிக்கனை அதில் டீப் ஃப்ரை செய்ய வேண்டும். டீப் ஃப்ரை செய்த சிக்கனை எடுத்து ஒரு ஓரமாக வைத்து விட்டு வேறு ஒரு தவாவில் எண்ணெயை ஊற்றி நறுக்கிக் கொண்டு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தயிர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து சமைக்க வேண்டும்:

இப்போது சிறிதளவு தயிர் மற்றும் தண்ணீரை சேர்த்து சமைக்க வேண்டும். பிறகு அந்தக் கலவையில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்த பொரித்த சிக்கனை சேர்த்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாட் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சமைக்க வேண்டும். அதில் உள்ள நீரானது ஆவியாகி மசாலாக்கள் சிக்கனில் நன்றாக சேரும் வரை சிக்கனை திருப்பிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். பிறகு எலுமிச்சை சாறை இதனுடன் சேர்க்க வேண்டும்.

Also Read : சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சரி செய்வது எப்படி..? 6 ஈசி டிப்ஸ் இதோ...

எலுமிச்சை துண்டுகள் சேர்த்து சிக்கனை பரிமாறவும்

தற்போது சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதனுடன் வறுத்த கருவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை துண்டுகள் மற்றும் நறுக்கிய வெங்காயங்களை சேர்த்து அலங்கரித்து மற்றவர்களுக்கு பரிமாறலாம்.

First published:

Tags: Chicken recipe, Non Vegetarian