ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தேங்காய் பால், சர்க்கரை, மாவு கலந்து ஆரோக்கியமான கோவா ஸ்பெஷல் கோன் இட்லி (Goan idli) ரெசிபி டிப்ஸ்.!

தேங்காய் பால், சர்க்கரை, மாவு கலந்து ஆரோக்கியமான கோவா ஸ்பெஷல் கோன் இட்லி (Goan idli) ரெசிபி டிப்ஸ்.!

கோன் இட்லி

கோன் இட்லி

கோவா மற்றும் மங்களூரின் சில பகுதிகளில் வழக்கமான இட்லி மாவுடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரைக் கலந்து செய்யப்படும் கோன் இட்லி மிகவும் ஸ்பெசல். பொதுவாக சர்க்கரை மற்றும் தேங்காய் பால் இரண்டுமே உணவிற்கு அதிக சுவைக்கொடுப்பது போல் இந்த இட்லியும் அமைந்துள்ளது.  

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்லி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்பதாலே அதிகளவில் சமையலில் இடம் பெறும் ஒரு டிஸ்களில் ஒன்றாக உள்ளது இந்த இட்லிகள். குறிப்பாக தென்னிந்தியா உணவு லிஸ்டில் முதலிடம் பிடிக்கும் இந்த ரெசிபிக்கு கொஞ்சம் கூடுதல் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்..

ஆம் கோவா மற்றும் மங்களூரின் சில பகுதிகளில் வழக்கமான இட்லி மாவுடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரைக் கலந்து செய்யப்படும் கோன் இட்லி மிகவும் ஸ்பெசல். பொதுவாக சர்க்கரை மற்றும் தேங்காய் பால் இரண்டுமே உணவிற்கு அதிக சுவைக்கொடுப்பது போல் இந்த இட்லியும் அமைந்துள்ளது. நீங்களும் விதவிதமாக இட்லி ரெசிபிகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த இட்லியை நீங்கள் செய்துக்கொள்ள முயற்சிக்கலாம். இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..

கோன் இட்லி செய்யும் முறை:

பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி – 2 கப்

சர்க்கரை- 3 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 3/4 கப்

தேங்காய் பால் - 3/4 கப்

உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

உலர் ஈஸ்ட் – 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் இரண்டு கிண்ணங்களில் அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை சுமார் 4-5 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். இதனையடுத்து அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக வழக்கமாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைக்க வேண்டும்.
இதனையடுத்து ஒரு பெரிய கிண்ணத்தில் தேங்காய் பாலுடன் அரிசி மாவையும், பருப்பு மாவையும் ஊற்றி மாவை கலக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.
இதனையடுத்து சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும். பின்னர் இந்த கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 2-3 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
பின்னர் இந்த வெந்தவுடன், வழக்கம் போல இட்லி சட்டியில் மாவை ஊற்றி சுமார் 20 நிமிடங்கள் மாவை ஆவியில் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் அதாவது கோன் இட்லி ரெடியாகிவிட்டது.
தேங்காய் பால் மற்றும் சர்க்கரை கலந்து செய்யப்படும் இந்த இட்லி கோவாவின் ஸ்பெஷல் இட்லிகளில் ஒன்றாக உள்ளது. இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது அதீத சுவையை நமக்கு கொடுக்கும். ஏதாவது புதிய ரெசிபிகள் செய்ய வேண்டும் என்றால், இனி இந்த இட்லியை உங்கள் வீடுகளில் செய்து பார்க்கவும். சுவையுடன் ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அளிக்கும்.
First published:

Tags: Breakfast, Coconut milk, Idli