ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பரோட்டா வெந்தய பன்னீர் ஸ்டஃப்... வேற லெவெல் சுவையாக இருக்கும்... டிரை பண்ணி பாருங்க...

பரோட்டா வெந்தய பன்னீர் ஸ்டஃப்... வேற லெவெல் சுவையாக இருக்கும்... டிரை பண்ணி பாருங்க...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பரோட்டா என்றாலே உங்கள் செல்லக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும், பன்னீர் மசாலா சேர்ந்த காம்பினேஷன் என்றால் குழந்தைகளுக்கு சொல்லத் தேவையில்லை. நாக்கில் உச் கொட்டி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் வழக்கத்தை விட கூடுதலாக பனி பெய்து வருகிறது. குறிப்பாக, எந்த நாளும் கதகதப்பாக இருக்கக் கூடிய சென்னையில் கூட பனியும், இதமான குளிரும் மக்களை மகிழ்விக்க தொடங்கியுள்ளது. குளிர்காலம் என்றாலே நம் நாவுக்கு சுவையான விருந்து தேவைப்படும். குளிர்காலத்தில் அதிகம் கிடைக்க கூடிய பாலக்கீரை, முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகளும் நம் உணவில் அதிகம் இடம்பெறும்.

ஆனால், ஸ்பெஷலாக எதையேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா! கவலை வேண்டாம், உங்களுக்காகத் தான் வெந்தய பன்னீர் பரோட்டா என்ற புதிய உணவு அறிமுகமாகியுள்ளது. அதுவும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற வயிற்று வலி மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான ரத்த சர்க்கரை போன்றவற்றை குறைக்கும் தன்மை உடைய வெந்தயக்கீரை சேர்க்கப்படுவதால் இது ஆரோக்கியமானது தானே!

Read More : மோமோஸ் பிரியரா நீங்கள்..? கண்டிப்பா இதை ட்ரை பண்ணூங்க..! பாலக் அட்டா மோமோஸ்..

 நீங்கள் வழக்கமான பன்னீரை வெட்டி எடுத்து பயன்படுத்துவதைப் போல அல்லாமல் பரோட்டாவுக்கு மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், சீரக தூள் போன்ற நமக்கு பிடித்தமான மசாலா பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :

வழக்கமாக பரோட்டா செய்யும் அதே முறையில் மைதா, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசறி எடுக்கவும். இந்தக் கலவை சிறிது நேரம் அப்படியே ஊற வேண்டும். இதனுடன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் பிசறி எடுக்கவும்.பன்னீர் மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை பந்து போல உருட்டிக் கொள்ளவும். இதனை பரோட்டாவுக்கு மத்தியில் வைத்து ஸ்டஃப் செய்யவும். இதை மூடி மீண்டும் உருட்டி, தட்டையாக எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும் அதில் இந்த பரோட்டாவை போட்டு மொறுமொறுப்பாக வேக வைத்து எடுக்கவும்.

டக்கரான சைட் டிஷ்

பரோட்டா என்றாலே உங்கள் செல்லக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும், பன்னீர் மசாலா சேர்ந்த காம்பினேஷன் என்றால் குழந்தைகளுக்கு சொல்லத் தேவையில்லை. நாக்கில் உச் கொட்டி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டில் எல்லோரும் இருக்கும் சமயத்தில் இந்த பரோட்டோ செய்தால், உனக்கு, எனக்கு என்று போட்டியே ஏற்படும்.

சரி, இந்த பரோட்டாவுக்கு சைட் டிஷ் தேவைப்படுகிறதா? அப்படியானால் பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக் கிழங்கு ஆகியவை சேர்க்கப்பட்ட வெஜ் குருமா அல்லது சிக்கன் கிரேவி அல்லது ஆட்டுக்கால் பாயா ஆகியவை நல்ல காம்பினேஷனாக அமையும். இதில் எது உங்களுக்கு விருப்பமானது அல்லது செய்வதற்கு எளிமையானதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Food, Paneer, Paneer recipes, Paratha