நீங்கள் தயிர் விரும்பியா? அப்போ இந்த இட்லியை மிஸ் பண்ணிடாதீங்க...

தயிர் இட்லி

சுலபமான முறையில் தயிர் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்...

 • Share this:
  காலையில் மீந்த மினி இட்லியை வைத்து மாலையில் அருமையான தயிர் மினி இட்லி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க... 

  தேவையான பொருட்கள்

  இட்லிகள் - தேவையான அளவு (குறைந்தது எட்டு அதிகபட்சம் பத்து)

  பச்சைமிளகாய் - 2

  தயிர் - 1 டம்ளர்

  தேங்காய் - 1 பத்தை

  சீரகம் - 1/2 டீஸ்பூன்

  இஞ்சி - 1/2 துண்டு

  உப்பு - தேவையான அளவு

  கொத்தமல்லி - தேவையான அளவு  செய்முறை:

  முதலில் தயிரை எடுத்துக் கொள்ளவும். அரைக்கத் தேவையான கொத்தமல்லி, இஞ்சி, சீரகம், தேங்காய், பச்சைமிளகாய் எடுத்து அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இறுதியில் இது அலங்கரிக்க தேவைப்படும். இப்பொழுது அரைத்த விழுதை தயிரில் போட்டு நன்றாகக் கடைந்து கொள்ளவும். இட்லிகளைச் சிறு, சிறு துண்டுகளாக்கி அரைத்த கலவையில் ஊற விட்டு கொத்தமல்லியைத் தூவி விடவும். காராபூந்தியை இதன்மேல் தூவி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

  மேலும் படிக்க... உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெசிபி...

  பின்குறிப்பு :

  1.தயிரில் இட்லி வெகுநேரம் ஊறினால் இட்லி குலைந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் பரிமாறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தயிரை ஊற்றி இட்லியை வேக வைப்பதும் நல்லது.

  2.விரும்பினால் பொடித்த திராட்சை, பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கலாம். காராபூந்தியை சாப்பிடும் போது தான் சேர்க்க வேண்டும். முதலிலேயே சேர்த்தால் ஊறி விடும் நன்றாக இருக்காது.

  மேலும் படிக்க...  ப்ரெட் போண்டா செய்வது எப்படி?
  Published by:Vaijayanthi S
  First published: