ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நறுமணமான நண்டு சூப் செய்வது எப்படி?

நறுமணமான நண்டு சூப் செய்வது எப்படி?

நண்டு சூப்

நண்டு சூப்

சுவையான நண்டு சூப் செய்யும் முறையை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சளி, இரும்மல், தொண்டை வலி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது.

தேவையான பொருட்கள்:

நண்டு - 2

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - சிறு துண்டு

மிளகு - அரை ஸ்பூன்

சீரகம் - கால் ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

பூண்டு - 4 பல்

பச்சைமிளகாய் - 2

பட்டை - தேவையான அளவு

பிரியாணி இலை - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும். உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும்.

தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.

நண்டு நன்கு வெந்ததும் மிளகு, சீரகத்தூள் போடவும்.

நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.

இதோ சுவையான நண்டு சூப் ரெடி.

மேலும் படிக்க... ஆந்திரா ஸ்டைல் கார நண்டு மசாலா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Food