ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நாவூற வைக்கும் உப்புக் கண்டம் ரெசிபி... சுவை அப்படி இருக்கும்.!

நாவூற வைக்கும் உப்புக் கண்டம் ரெசிபி... சுவை அப்படி இருக்கும்.!

உப்பு கண்டம்

உப்பு கண்டம்

சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கும் பட்சத்தில் ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும். தேவைப்படும் போது அவ்வபோது எண்ணெயைக் காயவைத்து பொரித்து எடுத்து சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உப்புக் கண்டம் எனக் கேட்டாலே பல பேர்க்கு எச்சில் ஊரும். அப்பளம், வத்தல் போல் தேவைப்படும் போது அவ்வபோது பொரித்து சாப்பிட வசதியாக இருக்கும். இதற்கு , உப்பு கண்டம், தட்டு கறி, காய போட்ட கறி என பல பெயர்கள் உண்டு. இவை மலேஷியா பர்மா போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்கள் பொருளீட்ட செல்லுகையில் ஹலால் உணவு கிடைக்காத பட்சத்தில்  உப்புக் கண்டத்தை எடுத்து சென்று உபயோகிப்பர். இப்படிப்பட்ட அருமையான உப்புகண்டத்தின் ஈஸி ரெசிபி இதோ.!

தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்து நறுக்கிய மட்டன் - 1/2 கிலோ

மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

புளி - எலுமிச்சம்பழ அளவு

உப்பு - போதுமான அளவு

மிளகுத்தூள்- தேவையெனில்

செய்முறை :

- புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

- மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பேஸ்ட் பதத்தில் ரெடி செய்யவும்.

- இதை ஒவ்வொரு மட்டன் துண்டுகளிலும் தடவி, உப்பையும் தடவி வெயிலில் ஒரு வாரம் வரை வைத்திருக்கவும். தட்டில் பரப்பி காய வைப்பதை விட பாரம்பரிய முறைப்படி சுத்தமான கயிற்றில் கோர்த்து குச்சியில் கட்டி காய வைப்பது சிறந்தது.

- உப்புக் கண்டம் நன்கு காய்ந்த பிறகு, மேலிருக்கும் உப்பை எடுத்துவிட்டு சுத்தமான பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.

- பிறகு எண்ணெயை காயவைத்து உப்புக்கண்டத்தை தட்டி பொரித்து எடுத்தால் சுவையான உப்புக் கண்டம் தயார்.

கூடுதல் குறிப்பு :  சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கும் பட்சத்தில் ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும். தேவைப்படும் போது அவ்வபோது எண்ணெயைக் காயவைத்து பொரித்து எடுத்து சாப்பிடலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு ஒரு நல்ல சைடிஷ் ஆகும். கறியை துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடுவது நல்லது.

First published:

Tags: Goat Liver, Mutton recipes