• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • ஒரே மாதிரி காலை உணவு சாப்பிட்டு போர் அடிக்குதா ? தினமும் இந்த மாதிரி செஞ்சி பாருங்க..

ஒரே மாதிரி காலை உணவு சாப்பிட்டு போர் அடிக்குதா ? தினமும் இந்த மாதிரி செஞ்சி பாருங்க..

காலை உணவு

காலை உணவு

தினமும் இட்லி, தோசை மட்டும் சாப்பிடுறீங்களா ? இந்த மாதிரியும் ட்ரை பண்ணுங்க..

 • Share this:
  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிகவும் பாப்புலரான உணவுகளை உள்ளடக்கிய தென்னிந்திய உணவு வகைகள், அதன் கலர்புல்லான சுவைக்கும் இனிப்பு முதல் புளிப்பு, மசாலா வரையிலான சுவைகளுக்கு பெயர் போனது. அதிலும் முக்கியமாக அரிசி அல்லது அரிசி சார்ந்த உணவுகளை தான் நாம் பெரும்பாலும் உட்கொள்வோம்.

  சரி வாருங்கள் சூப்பரான காலை உணவுகளின் பட்டியலை இங்கே காண்போம். இதில் உங்களுக்கு பிடித்ததை ட்ரை செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். தென்னிந்திய உணவுகள் முக்கியமாக புளிக்கவைக்கப்படுவதால் அவை குடல் மைக்ரோபயோட்டாவுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் இவை ஜீரண சக்தியை அமர்களப்படுத்தி உங்களை ரிலாக்ஸாக்குகிறது.

  காய்கறி உப்மா: இது ஒரு சுவையான காலை உணவு, ரவா அல்லது சூஜியிலிருந்து உப்மா தயாரிக்கப்படுகிறது. இது நெய், முந்திரி, வெங்காயம், இஞ்சி மற்றும் கூடுதலான மசாலாப் பொருட்களால் இது தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு, காய்கறிகள் சேர்த்த உப்மா ஏற்ற உணவு. புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் இதில் உள்ளன. அனைவருக்கும் ஏற்றது.

  தோசை: தோசை தேங்காய் சட்னி காம்பினேஷன பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. தோசையை நீங்கள் சாப்பிட்டால் அன்றைய நாளே உங்களுக்கு அட்டகாசமாக்கும். கால்சியம் சத்து குறைவாக உள்ள பெண்கள் தேங்காய் சாப்பிட்டால், அந்தக் குறை நீங்கும். எனவே, தேங்காய் சட்னி நமக்கு ஆரோக்கியமான உணவே. குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதால் எலும்பு பலம் பெறும்; வளர்ச்சி பெறும். மேலும் தோசை உங்களுக்கு நல்ல ஜீரணத்தை தந்து உடலை இலகுவாக்கும்.

  பூரி, உருளைக்கிழங்கு: பூரி செய்ய மைதா மாவைத் தவிர்ப்பது நல்லது. பூரியை கோதுமை மாவிலேயே செய்வது நல்லது. ஏனெனில், கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் நம் உடலுக்குச் சக்தியை கொடுப்பவை. உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன் சத்து, குழந்தைகளை ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கும். சிலர் இதை அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பர். வாரத்தில் ஒருமுறை என்றால் எந்த சிக்கலும் இருக்காது.  இட்லி: இட்லி, சாம்பாரில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த உணவு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள்கூட காலையில் சாப்பிடலாம். மீதமான இட்டிலியை கூட விட்டு வைக்காமல் அதிலும் உப்மா செய்து சாப்பிடலாம். அதுவும் நல்ல பலனை தரும்.

  also read : அசத்தலான சுவையில் இளநீர் பாயாசம் செய்ய தெரியுமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி

  புட்டு - கொண்டக்கடலை : வாழை இலை அதில் சுடச்சுட வைக்கப்பட்டிருக்கும் புட்டு. மேலே தூவப்பட்டு வெண்ணிறத்தில் மினுங்கும் தேங்காய்த் துருவலும் நாட்டுச் சர்க்கரையும். பிறகென்ன சில நிமிடங்களிலேயே காலிசெய்துவிடுவோம். பார்த்தாலே நாவூரச் செய்யும் மாயாஜாலம் இதற்கு உண்டு. கேரளாவில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபல காலை டிபன் தான் இந்த புட்டு. கொண்டக்கடலையில் உள்ள புரோட்டீனும் புட்டில் உள்ள கார்போஹைட்ரேட்டும் அனைவருக்கும் ஏற்றவை. காலையில் சாப்பிடவேண்டிய அருமையான உணவு இது. சத்தான இந்த டிபன் நம்மைச் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். ஆகவே வாரத்தில் இதை ஒரு முறையாவது ட்ரை பண்ணுங்க.  பொங்கல் : இது ஒரு பிரபலமான அரிசி டிஷ், பொங்கலில் 2 வகைகள் உள்ளன. ஒன்று "சக்கரை பொங்கல்" இது இனிமையானது. இரண்டாவதாக "வென் பொங்கல்" இது காரமான மற்றும் பொதுவான காலை உணவாகும். இது வழக்கமாக சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகிறது. பொதுவாக பொங்கல் சாப்பிட்டால் மந்தமாக இருக்கும் என்ற உணர்வு நாம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. உண்மையில் பொங்கல் மிக மிக ஆரோக்கியமான உணவு. நாம் சேர்க்கின்ற வனஸ்பதி போன்றவற்றினால்தான் மந்தத்தன்மை, தூக்கம் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. புரோட்டீன் சத்துக்கள் பொங்கலில் அதிக அளவில் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்றது.

  also read : சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் கத்தரிக்காய் கிரேவி : இதுவரை செஞ்சதில்லையா..? இன்னைக்கே அசத்திடுங்க…

  சப்பாத்தி/ரொட்டி : சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சப்பாத்தி சிறந்த உணவு. டயட்டில் இருப்பவர்களும் சப்பாத்தியை தேர்வு செய்வது சிறந்தது. சப்ஜியில் சேர்க்கும் பருப்பில் உள்ள புரோட்டீன் சத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. எனவே எல்லோருமே சப்பாத்தி/ரொட்டி, சப்ஜி சாப்பிடலாம்.  குழிப் பணியாரம் : குழிப் பணியாரம் என்பது அரிசிமாவினால் செய்யப்படும் ஒரு உணவுப்பொருள். இது குழிப்பணியாரச் சட்டியில் செய்யப்படுகிறது. உருண்டை வடிவம் கொண்ட இந்த உணவு தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இட்லி மற்றும் தோசை போல் இதுவும் அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள்களால் செய்யப்படுகிறது. காரம் மற்றும் இனிப்பு என இருவகையான குழிப்பணியாரங்கள் செய்யப்படுகின்றன. சில பகுதிகளில் இது முக்குழி பணியாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

  இடியாப்பம் : இடியாப்பம் என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்பட்டாலும் கேழ்வரகு கோதுமை மாவும் பயன்படுத்தலாம். , அரிசி மாவை நூடுல் வடிவத்தில் அழுத்தி பின்னர் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுதான் இது.  செட்டிநாடு ஆப்பம் : நிறைய பேருக்கு ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலேயே கடைகளுக்கு சென்று விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், வீட்டில் ஆரோக்கியமாக, சுவையாக செய்து சாப்பிடுவதற்கு தெரியாது. ஆனால், இட்லி தோசையை விட ஆபத்தை சுலபமாக சுட்டு விட முடியும். அதுவும் செட்டிநாடு ஆப்பம் என்றால் ரொம்ப பேமஸ். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தின் ஆப்பம் தான் செட்டிநாடு ஆப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆப்பத்தையும் வாரத்தில் ஒருநாள் எடுத்துக்கொள்ளுங்கள்.

  காலை உணவு தான் அன்றைய நாளின் மிக முக்கிய உணவு. அன்றைய நாளுக்கான ஆற்றலை அளிப்பதிலும் காலை உணவிற்கு முக்கிய பங்கு உண்டு. காலை உணவைத் தவறுவது வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். உடல் பருமனை அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து பல வகையான நோய்களையும் உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க ஆரோக்கியமான காலை உணவை தினமும் தவறாமல் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அந்த வகையில் மேற்சொன்ன உணவுகள் உங்கள் நாளை அற்புதமாக்கிடும். மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணுங்க.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: