• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சீரியலில் தந்தைக்காக திருமணம்.. நிஜத்திலும் தந்தைக்காக நக்‌ஷத்ரா செய்த ஸ்பெஷல்!

சீரியலில் தந்தைக்காக திருமணம்.. நிஜத்திலும் தந்தைக்காக நக்‌ஷத்ரா செய்த ஸ்பெஷல்!

நக்‌ஷத்ரா

நக்‌ஷத்ரா

நக்‌ஷத்ரா அவரின் அப்பாவுக்காவே செய்து காட்டி அசத்தினார்.

  • Share this:
    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தந்தையின் பாசமிகு பெண்ணாகும் நடிக்கும் நக்‌ஷத்ரா நிஜத்திலும் தந்தையின் செல்லம் தான். அவருக்காவே நக்‌ஷத்ரா செய்த ஸ்பெஷல் குக்கர் கேக் தான் இன்றைய ரெசிபி.

    சன் டிவியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கியவர் இன்று முன்னணி சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நக்‌ஷத்ரா. இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் வேற . இவரின் பேச்சு ஏற்கெனவே எல்லோருக்கும் பிடித்து போக இவரின் நடிப்பும் எல்லோருக்கு ஃபேவரெட் ஆனது. முதன் முதலின் குஷ்பு உடன் இவர் சேர்ந்து நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பின்பு நாயகி சீரியலில் 2 ஆம் பாகத்தில் இவர் லீட் ரோல் செய்ய தொடங்கினார். அந்த சீரியலிலும் இவரின் கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது. இந்நிலையில் தான் கொரோனா காரணமாக அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் நக்‌ஷத்ராவுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.

    இந்த கொரோனா காலத்தில் யூடியூப் சேனல் தொடங்கிய பிரபலங்கள் இங்கு ஏராளம். அவர்களில் நக்‌ஷத்ராவும் ஒருவர்.குறிப்பாக இவரின் சமையல் வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளும். அந்த யூடியூப் சேனலில் தான் ஒருமுறை இவர் குக்கர் கேக்கை செய்துகாட்டினார். தற்போது இவர் நடித்து வரும் சீரியல் தமிழும் சரவஸ்தியும். இந்த சீரியலில் அப்பாவின் பாசமிகு பெண்ணாக நடித்து வருகிறார். ஆனால்  நிஜத்திலும் நக்‌ஷத்ரா  அப்படி தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதனால் தான் தன்னுடைய தந்தைக்கு பிடித்தமான சாக்லேட் கேக்கை விரும்பி செய்து காட்டினார். அதற்கு தேவையான பொருட்கள் என்றால் கோதுமை, கோ கோ பவுடர், பேக்கிங் சோடா, நாட்டுக்சர்க்கரை, உப்பு, எண்ணெய், கூலிங் வாட்டர், எலுமிச்சை இந்த பொருட்கள் இருந்தாலே போதும் ஈஸியாக அவன் இல்லாமல் குக்கரிலும் கேக் செய்து விடலாம். இதை தான் நக்‌ஷத்ராவும் செய்து காட்டியுள்ளார்.

    முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ஜலித்த கோதுமை மாவு, கோ கோ பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு தனியாக ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை, கூலிங் வாட்டர், எண்ணெய் சேர்த்து நுரை வரும் வரை கலக்க வேண்டும். பின்பு அதில் ஒரு எலுமிச்சை சாறை முழுசாக சேர்க்க வேண்டும். பின்பு கலவையுடன் கோதுமை மாவு கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு எந்த பாத்திரத்தை குக்கரில் வைக்கிறோமோ அதில் நெய் தடவி கேக் கலவையை அதில் ஊற்றி 15 நிமிடம் குக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும் விசில் போட கூடாது. மணல், உப்பு, தண்ணீர் உங்கள் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம். 15 நிமிடம் கழித்து பார்த்தால் சூப்பரான குக்கர் கேக் தயார். இந்த ஸ்பெஷல் கேக்கை நக்‌ஷத்ரா அவரின் அப்பாவுக்காவே செய்து காட்டி அசத்தினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: