Home /News /lifestyle /

யூடியூபில் கலக்கும் சைவ மீன் வறுவல்.. நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!

யூடியூபில் கலக்கும் சைவ மீன் வறுவல்.. நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!

சைவ மீன் வறுவல்

சைவ மீன் வறுவல்

. யூடியூபில் வித்தியாசமான சமையல் வீடியோக்களை வெளியிட்டு கலக்கும் “our cooking time' யூடியூப் சேனலில் இந்த ரெசிபி வெளியிடப்பட்டுள்ளது.

    தலைப்பை பார்த்து உள்ளே வந்த அனைவருக்கும் அதென்ன சைவ மீன் வறுவல் என்ற சந்தேகம் வந்து இருக்கும். அது ஒண்ணுமில்லை. மீன் வறுவல் ஸ்டைலில் காய்கறிகளை வைத்து வறுவல் செய்தால் அதற்கு பெயர் தான் சைவ மீன் வறுவல். அந்த வகையில் இன்று பார்க்க போவது வாழைக்காய் வறுவல். யூடியூபில் வித்தியாசமான சமையல் வீடியோக்களை வெளியிட்டு கலக்கும் “our cooking time' யூடியூப் சேனலில் இந்த ரெசிபி வெளியிடப்பட்டுள்ளது.

    வாங்க இப்ப இந்த ரெசிபி எப்படி செய்யலாம்ன்னு பார்க்கலாம் .இதற்கு தேவையான பொருட்கள் வாழைக்காய், உப்பு, எண்ணெய், தனியா தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது.

    இதையும் படிங்க/.. இப்படியொரு பாயாசத்தை இதுவரை ட்ரை பண்ணி இருக்கீங்களா? குக் வித் சங்கீதா ஸ்பெஷல்!

    செய்முறை:

    1. முதலில் வாழைக்காயை தோல் எடுக்காமல் அப்படியே சுடு தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும்.

    2. பின்பு அதை தோல் நீக்கி வட்டமாக நறுக்க வேண்டும். முக்கியமாக உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட வேண்டும்.

    3. இப்போது தனியாக ஒரு பாத்திரத்தில் தனியா தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    4. இந்த மசாலாவில் நறுக்கிய வாழைக்காயை சேர்த்து சில வினாடிகள் ஊற வைக்க வேண்டும். மசாலா காயில் நன்கு இறங்கும்.



    5. இப்போது வாழைக்காயை பதமாக எண்ணெய்யில் மீன் வறுவல் போது இரண்டு பக்கமும் வறுத்து எடுக்க வேண்டும்.

    6. அவ்வளவு தான் சூப்பரான வாழைக்காய் வறுவல் தயார். முக்கியமாக மீன் சாப்பிட பிடிக்காத அல்லது சுத்தமான சைவ பிரியர்களும் இந்த சைவ மீன் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food recipes, Oil food

    அடுத்த செய்தி