Tamil New Year Recipe | வேப்பம்பூ பச்சடி செய்வது எப்படி?
Tamil New Year Recipe | வேப்பம்பூ பச்சடி செய்வது எப்படி?
வேப்பம்பூ பச்சடி
Tamil New Year Recipe | வேப்பம்பூக்கள் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அதில் வேப்பம் பூ பச்சடி முக்கிய அம்சமாகும். அதில் பச்சடி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை:
வேப்பம்பூ – ஒரு கப்
புளி – எலுமிச்சை அளவு
கடுகு – அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – ஒன்று
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
வெல்லம் – 100 கிராம்
உப்பு – சிறிதளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து புளிக் கரைசல், உப்பு சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்க விடவும். சிறிது கொதித்த வுடன் வேப்பம் பூவை வறுத்துப் போட்டு இறக்கவும். வேப்பம்பூ சீஸனில் வேப்பம் பூவை சேகரித்து வைத்தால்… பொடி, துவையல், ரசம் என்று பலவிதமாக பயன்படுத்தலாம். இது பித்தத்துக்கு மிகவும் நல்லது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.