ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒரு வினாடிக்கு 2 பேர் பிரியாணி ஆர்டர் - ஸ்விகியை திணறடித்த பிரியாணி பிரியர்கள்!

ஒரு வினாடிக்கு 2 பேர் பிரியாணி ஆர்டர் - ஸ்விகியை திணறடித்த பிரியாணி பிரியர்கள்!

பிரியாணி

பிரியாணி

முன்னனி நிறுவனமான ஸ்விகி ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கும் அதிக உணவை பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகளின் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் பிரியாணிக்கே முதலிடம் கிடைத்துள்ளது. ஸ்விகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில் அனைத்தும் ஆன்லைன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி உணவு விற்பனையில் தொடங்கி டெலிவரி வரைக்குமே நம்மால் ஆன்லைனில் செய்துக்கொள்ள முடியும். முன்னனி நிறுவனமான ஸ்விகி ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கும் அதிக உணவை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரியாணி முதல் இடம் பிடித்துள்ளது.

ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி எனவும், சராசரியாக ஒரு வினாடிக்கு 2 பேர் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளது. இந்த அளவுக்கு பிரியாணி விற்பனையானது, புதிய சாதனை எனவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.

Read More : குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

மசால் தோசை, சிக்கன் பிரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா ஆகியவை அதிகம் ஈர்த்த உணவுகளில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அதிகம் ஆர்டர் செய்த ஸ்னாக்ஸ் வரிசையில் சமோசா முதலிடம் பிடித்துள்ளது. ஒரு ஆண்டில் 40 லட்சம் பேர் ஆன்லைனில் சமோசா ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விகி கூறியுள்ளது.

First published:

Tags: Food, Lifestyle, Swiggy