Home /News /lifestyle /

பாசிப்பருப்பை வைத்து இப்படியொரு ஸ்வீட்டா? முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அடிக்கடி செஞ்சிருக்கலாம்!

பாசிப்பருப்பை வைத்து இப்படியொரு ஸ்வீட்டா? முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அடிக்கடி செஞ்சிருக்கலாம்!

பாசிப்பருப்பு ஸ்வீட்

பாசிப்பருப்பு ஸ்வீட்

புகழ் பெற்ற அசோக அல்வாவை பாசிப்பருப்பு கொண்டு தான் செய்ய வேண்டும் . மொத்தமாக இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடம் போதும்.

    பாசிப்பருப்பு என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் தான். ஆனால் இன்று நாம் பார்க்க போவது பாசிப்பருப்பை வைத்து செய்யக்கூடிய அட்டகாசமான ஸ்வீட். புகழ் பெற்ற அசோக அல்வாவை பாசிப்பருப்பு கொண்டு தான் செய்ய வேண்டும் . மொத்தமாக இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடம் போதும். ஸ்வீட் பிரியர்களான குழந்தைகளுக்கு பாசிப்பருப்பில் செய்து கொடுக்கும் டிஷ் நல்ல ஆரோக்கியத்தை தரும். கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டில் சுத்தமாக செய்து சாப்பிடும் ஸ்வீட்களுக்கு ஆயுள் கெட்டி.

    விசேஷ நாட்களில் கூட வீடுகளில் அடிக்கடி கேசரி, பாயாசம் செய்வதை தவிர்த்துவிட்டு இதுப்போன்ற வித்தியாசமான ஸ்வீட்டை செஞ்சி கொடுக்கலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஸ்வீட்டை செய்து காட்டி வெளியிட்டுள்ளவர் அபி. இவர் இந்தியன் ரெசிபிஸ் என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்போது  இந்த பாசிப்பருப்பு அல்வா ஸ்வீட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

    இதையும் படிங்க.. ஒருமுறை இந்த மாதிரி மீன் குழம்பு வச்சி பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க!

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு, நெய், கோதுமை மாவு, முந்திரி, சர்க்கரை

    செய்முறை:

    1. முதலில் 1 கப் பாசிப்பருப்புடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.

    2. பின்பு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    3. இப்போது அதே கடாயில் 1 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து வறுக்க வேண்டும்.

    4. பின்பு வேக வைத்த பாசிப்பருப்புடன் 1 கப் சர்க்கரை சேர்த்து மாவு போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.



    5. இப்போது இந்த கரைசலை கடாயில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு பக்குவமாய் விடாமல் கிண்ட வேண்டும்.

    இதையும் படிங்க.. சுஜா வருணி சொல்லி தந்த ஆந்திரா சிக்கன் பச்சடி ரெசிபி.. ஒருமுறை நீங்களும் செஞ்சி தான் பாருங்களேன்!

    6. இறுதியாக வறுத்த முந்திரி சேர்த்து, எக்ஸ்ட்ரா கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சூப்பரான டேஸ்டியான பாசிப்பருப்பு அசோக அல்வா தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food recipes, Kids Food, Sweet recipes

    அடுத்த செய்தி