மகா சிவராத்திரிக்கு படையல் வைக்க பிடி கொழுக்கட்டை ஸ்வீட் கொழுக்கட்டை, சக்கரைவள்ளி கிழங்கு, ஸ்வீட் பொங்கல் என அனைத்தும் செய்து சிவபெருமானை வணங்குவது வழக்கம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இதனை செய்துதான் சிவனுக்கு சிவராத்திரி அன்று நிவேதனம் செய்வார்கள். இதில் இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றரை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
துருவிய தேங்காய் - அரை மூடி
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறிக் கொள்ளவும்.
இவை ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும். பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து வெந்ததும் இறக்கி பரிமாறலாம். இப்போது சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.