Home /News /lifestyle /

பச்சை மிளகாய் மட்டும் வைத்து ஸ்நாக்ஸா..? செஃப் சரண்ஷ் குக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்!

பச்சை மிளகாய் மட்டும் வைத்து ஸ்நாக்ஸா..? செஃப் சரண்ஷ் குக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்!

செஃப் சரண்ஷ் குக்கிங் டிப்ஸ் வீடியோ

செஃப் சரண்ஷ் குக்கிங் டிப்ஸ் வீடியோ

Viral Video | பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடுவது போன்று மும்பையைச் சேர்ந்த பிரபல சமையல்காரர் சரண்ஷ் கோயிலா வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்திய உணவுகள் ஒவ்வொன்றுக்கும் தனிச்சுவை உண்டு. காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவையும் கலந்துக் கொடுப்பதில் வல்லவர்கள் தான் நம் இந்திய சகோதரர்கள். தென்னிந்தியாவில் காலை உணவிற்கு இட்லி, தோசை, பொங்கல், பூரி , சப்பாத்தி என்றும் மதிய உணவிற்கு சாப்பாடு,ரசம், பருப்பு, அசைவ குழம்புகள், காய்கறிகள், இரவிற்கு மீண்டும் இட்லியோ? தோசையோ? சாப்பிடுவது வழக்கம். இதேப்போன்று வட இந்தியாவைப் பொறுத்தவரை பருப்பு, சப்ஜி, சப்பாத்தி, போன்றவைத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.

இப்படி உணவு முறையும், சமைக்கும் விதமும் வெவ்வேறாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் காரம் என்கிற சுவையைக் கொடுப்பது மிளகாய் தான்.நாம் சமைக்கும் உணவுகளில் காரத்திற்காக மிளகாயை சேர்ப்போம். இருந்த போதும் மிளகாயை சாப்பிடாமல் தட்டில் ஒதுக்கித் தான் வைப்போம். மிளகாய் காரத்தை சிலர் வெறுமனே யாராலும் சாப்பிடமுடியாது.

ஆனால் பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடுவது போன்று மும்பையைச் சேர்ந்த பிரபல சமையல்காரர் சரண்ஷ் கோயிலா வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்னதான் மிளகாயைப் பயன்படுத்தி செய்தார்? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


Read More : 56 இன்ச் தாலி, 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் வெகுமதி.. மோடி பிறந்தநாளுக்கு டெல்லி உணவகத்தின் அசத்தல் ஆஃபர்


பிரபல சமையல் கலைஞர் சரண்ஷ் வெளியிட்ட வீடியோவில், முதலில் சிறிதளவு பச்சை மிளகாயை எடுத்து கொள்கிறார். பச்சை மிளகாயை அதிக சூட்டில் லேசாக வறுத்தெடுக்க வேண்டும் என்றும் பின்னர் அதனுடன் துருவிய பூண்டு, எள், சோயா சாஸ் மற்றும் வெல்லம் அல்லது சர்க்கரையை சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். இதனையடுத்து சில நிமிடங்களில் தயாரான இனிப்பு மற்றும் காரம் நிறைந்த மிளகாயை அப்படியே சாப்பிடுவது போன்று வீடியோ முடிவடைகிறது. மேலும் இதனை ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம் என்கிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Saransh Goila (@saranshgoila)






இதை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள், இந்த மிளகாய்யை முழுசா சாப்பிடலாமா? டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ்க்கு வச்சிருக்கேன், சூப்பர் ரெசிபி, சாதத்திற்கு சைடு டிஸ் சூப்பர் என்றும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் நீங்கள் மிகவும் திறமையான சமையல் கலைஞர் மட்டுமில்லை என்றும் மிளகாயை இப்படி சாப்பிடுகிற தைரியசாலி என்றும், உங்களைப் போன்று எனக்கு கொஞ்சம் கூட தைரியம் இல்லை எனவும் இன்ஸ்டாவில் தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் வேறு ஏதேனும் புது விதமான ஸ்நாக்ஸ் மற்றும் ரெசிபிகள் எப்படி செய்யலாம்? என்பது குறித்து கொஞ்சம் வீடியோ போடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

மிளகாயை அப்படியே சாப்பிடமுடியாது தான், ஆனால் பிரபல சமையல் கலைஞர் செய்தது போல் வெல்லம், எள், சேர்த்து செய்யும் போது, இனிப்பு மற்றும் கசப்புடன் புதுவிதமான சுவையை நமக்கு தரக்கூடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த மிர்ச்சி ரெசிபி எப்படி இருக்குன்னு நீங்களும் கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Food, Trending, Viral

அடுத்த செய்தி