Home /News /lifestyle /

புட்டு சாப்பிட்டிருப்பீங்க... சுறா புட்டு சாப்பிட்டிருக்கீங்களா?

புட்டு சாப்பிட்டிருப்பீங்க... சுறா புட்டு சாப்பிட்டிருக்கீங்களா?

சுறா மீன் புட்டு

சுறா மீன் புட்டு

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.

    சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. சுவையான சுறா புட்டு எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

    தேவையான பொருட்கள்

    சுறா மீன் - ஒரு கிலோ

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

    சோம்பு - அரை டீஸ்பூன்

    பூண்டு - 10

    இஞ்சி - ஒரு துண்டு

    சின்ன வெங்காயம் - 10

    பச்சை மிளகாய் - 3

    எலுமிச்சை சாறு - பாதி

    கறிவேப்பிலை நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    முதலில் சுறா மீன்களை துண்டுப்போட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர், இதனை இட்லி தட்டில் ஒரு துணிப்போட்டு அதன் மீது வைத்து வேக விடவும். இது ஆறியதும் தோல், முள்ளை எடுத்துவிட்டு மீன் துண்டுகளை மசித்து வைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    பின்னர், மீன் சேர்த்து நன்றாக கிளறி அதன் நீர் போகும்வரை வதக்கவும். இறுதியாக, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு பிழிந்தால் சுறா புட்டு ரெடி..

    மேலும் படிக்க... குழந்தைகள் விரும்பு உருளைக்கிழங்கு சாதம் : இப்படி செஞ்சு கொடுங்க..
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Fish, Food

    அடுத்த செய்தி