• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோவக்காயை வைத்து இத்தனை வெரைட்டி செய்ய முடியுமா ?

கோவக்காயை வைத்து இத்தனை வெரைட்டி செய்ய முடியுமா ?

கோவக்காய்

கோவக்காய்

கோவக்காய் நம் உடலில் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

  • Share this:
கோவக்காய் எளிதில் கிடைக்கும் ஒரு காய்கறி. ஆனால் இதனை மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடுவதில்லை. கோவக்காய் நம் உடலில் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதுதவிர, கோவைக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.

மேலும், இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை நம் கண்களுக்கு நல்லது என்றும் கருதப்படுகிறது. கோவக்காய் நம் உடலில் வளர்சிதை மாற்ற அளவை அதிகரிப்பதாகவும் அறியப்படுகிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை நிர்வகிப்பதற்கான ஒரு நல்ல மூலப்பொருளாக செயல்படுகிறது. இதில் ஃபைபர், வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த கோவைக்காயை இந்திய மசாலாப் பொருட்களோடு சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையே தனிதான். அந்த வகையில் சில ஈஸியான, சுவையான ரெசிபிக்கள் குறித்து காண்போம்.



1.கோவக்காய் தக்காளி மிக்ஸ்:

தேவையான பொருட்கள்

கோவக்காய்- 200 கிராம்
எண்ணெய் -1 டீஸ்பூன்
நெய் -1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்- ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய் -1
தக்காளி- 2 நடுத்தர அளவு (அரைத்தது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1 / 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 / 2 டீஸ்பூன்
தனியா பவுடர் -1 டீஸ்பூன்
கஸ்தூரி மெதி- 1 டீஸ்பூன்
தண்ணீர்- ¼ கப்
வறுத்த நொறுக்கப்பட்ட வேர்க்கடலை- 2 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி- 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி

செய்முறை :

கடாயில் சிறிதளவு எண்ணெய், நெய் ஊற்றி, சூடானதும் பெருங்காயம் செய்து அதில் வட்டவட்டமாக நறுக்கிவைத்த கோவைக்காயை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த கலவையில் உப்பு, மற்றும் அனைத்து தூள் மசாலா, மெதி ஆகியவை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும். பிறகு வறுத்த நொறுக்கப்பட்ட வேர்க்கடலையை சேர்க்கவும். இப்பொது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் கடாயை மூடி வைத்து சமைக்கவும், இறுதியாக அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம். இதனை ரோட்டிஸ், புல்கா மற்றும் சாப்பாடு போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.



2. கோவக்காய் புலாவ்:

தேவையான பொருட்கள்:

கோவக்காய்- 200 கிராம்
பாஸ்மதி அரிசி- 1 /2 கோப்பை
எண்ணெய்- 1 டீஸ்பூன்
நெய் -1 தேக்கரண்டி
சீரகம்- 1 டீஸ்பூன்
இஞ்சி- சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
வெங்காயம்- 1
தக்காளி- 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -1 / 2 டீஸ்பூன்
மெதி இலைகள்- ½ ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள்- தேவையான அளவு.
கரம் மசாலா தூள் -1 / 2 டீஸ்பூன்
தண்ணீர் -தேவையான அளவு
அலங்கரிக்க - வறுத்த வெங்காயம் மற்றும் நட்ஸ்

செய்முறை:

முதலில் அரை மணி நேரத்திற்கு அரிசியை ஊற வைக்க வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து, சூடானதும் சீரகம் சேர்க்க வேண்டும். அது பொரிந்ததும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி சேர்த்து வறுக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்த கோவக்காய், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். விரும்பினால் கேரட், பட்டாணி, கேப்சிகம், சோயா துண்டுகள் போன்ற இன்னும் சில காய்கறிகளைச் சேர்க்கலாம். இப்போது ஊற வைத்த அரிசியை வடிகட்டி மசாலா கலவையில் சேர்த்து கிளறி விடுங்கள். பின்னர் கொத்தமல்லி இலைகள், மெதி இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசியின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குக்கரை மூட 2 விசில் விடுங்கள். அவ்வளவுதான் கோவக்காய் புலாவ் ரெடி. இதனை ஒரு தட்டில் வைத்து அலங்கரிக்க வறுத்த வெங்காயம் மற்றும் நட்ஸ் சேர்த்து பரிமாறலாம்.



3.கோவக்காய் பச்சை பட்டாணி கறி:

தேவையான பொருட்கள்:

கோவக்காய்- 150 கிராம்
வேகவைத்த பட்டாணி - 1 கப்
எண்ணெய்- 1 தேக்கரண்டி
நெய்- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி- தேவையான அளவு
சிவப்பு மிளகாய்- 2
பெருங்காயத்தூள் - 1 பிஞ்ச்
இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
வெள்ளை எள் விதைகள் - 1 டீஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்- ½ கப்
நறுக்கிய தக்காளி -1 / 2 கப்
துருவிய தேங்காய்- ½ கப்
தயிர்- ½ கப்
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
ஆம்ச்சூர் தூள்- ½ டீஸ்பூன்
தனியா ஜீரா பவுடர் -1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 / 2 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை இரண்டையும் சேர்த்து சூடாக்கி, அதில் கடுகு சேர்க்க வேண்டும். அது பொரிந்ததும் பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து நனவு வதக்கவும். பின்னர் மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, கோவக்காய், தக்காளி, உப்பு மற்றும் பிற மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இறுதியாக தேங்காய் மற்றும் அடித்து வைத்த தயிர், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து, சுமார் 15-20 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்க வேண்டும். அடிபிடிக்காமல் அவ்வப்போது கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். மசாலாவில் தண்ணீர் வடிந்ததும் அதில் கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறலாம். சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: