Home /News /lifestyle /

அறிவாற்றல் மற்றும் பார்வை திறனை மேம்படுத்தும் அவகடோ… ஆய்வு சொல்லும் மலைக்கவைக்கும் தகவல்!

அறிவாற்றல் மற்றும் பார்வை திறனை மேம்படுத்தும் அவகடோ… ஆய்வு சொல்லும் மலைக்கவைக்கும் தகவல்!

ஒரு நாளைக்கு ஒரு அவகடோ பழத்தை உட்கொள்பவர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆய்வில் அறிவாற்றல் மற்றும் பார்வை இரண்டிலும் முன்னேற்றம் கண்டறியப்பட்டது.

ஒரு நாளைக்கு ஒரு அவகடோ பழத்தை உட்கொள்பவர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆய்வில் அறிவாற்றல் மற்றும் பார்வை இரண்டிலும் முன்னேற்றம் கண்டறியப்பட்டது.

ஒரு நாளைக்கு ஒரு அவகடோ பழத்தை உட்கொள்பவர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆய்வில் அறிவாற்றல் மற்றும் பார்வை இரண்டிலும் முன்னேற்றம் கண்டறியப்பட்டது.

அவகடோ பழங்கள் சுவையானது மட்டுமல்ல நவநாகரீகமானதும் கூட! துடிப்பான, பச்சை, மென்மையான பழம் ஏராளமான சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளின் எந்த நேரத்திலும் உணவுகளுடன் அவகடோவை உண்ணலாம். அவை ஒரு சிறந்த உடல் எடை குறைப்பு உணவாகவும் நன்மைபயக்கும் நீண்ட பட்டியலையும் வழங்குகின்றன. ஆனால், இந்த அவகடோ பழத்தில் நிறைய கொழுப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அதிக கலோரிகள் இருப்பதால், அவகடோ பழத்தை சாப்பிடுவது உடலுக்கு என்ன செய்யும் என்று பலர் சிந்திக்கின்றனர்.

ஃபைபர் உட்கொள்ளலை அதிகரிக்கும்:

பழங்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் அதிக நார்ச்சத்து இருப்பதாக அறியப்படுகிறது. மேலும், அவகடோ பழங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சராசரி அவகடோ பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது. ஆனால் அதில் மூன்று கிராம் நார்ச்சத்து உள்ளது. அதிக நார்ச்சத்து உட்கொள்வது இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்:

அவகடோ பழங்கள் மேம்பட்ட இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அவகடோ பழங்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சோடியம் குறைவாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஒரு சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறைந்த சோடியம் உணவு மற்றும் அதிக பொட்டாசியம் உணவு உட்கொள்ளும் போது, ​​​​சிறுநீரில் சோடியம் இழப்பு அதிகரித்து இரத்த அழுத்தம் குறையும்.

உடல் பருமன் ஆபத்தைக் குறைக்கும்:

அவகடோ பழத்தில் அதிக எடை அல்லது பருமனாக மாறும் அபாயத்தைக் குறைக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, தினசரி ஒரு அவகடோ பழத்தை உட்கொள்வது உடல் பருமனில் இருந்து காக்கும்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

அவகடோ பழங்கள் உங்கள் பார்வையை சிறந்த நிலையில் வைத்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு அவகடோ பழத்தை உட்கொள்பவர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஆய்வில் அறிவாற்றல் மற்றும் பார்வை இரண்டிலும் முன்னேற்றம் கண்டறியப்பட்டது. அவகடோ பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் லுடீன் உள்ளது. வயது தொடர்பான கண் நோயைத் தடுப்பதிலும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்திறனை வழங்குவதிலும் லுடீன் பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கும்:

அவகடோ பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உள்ளடக்கம், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. அவகடோ பழத்தில் உள்ள நார்ச்சத்து உங்களை விரைவாக முழுதாக உணர உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான கொழுப்பின் மூலமானது மனநிறைவு நிலைகளுக்கு உதவுகிறது. இவை இரண்டும் உங்கள் எடையை நிர்வகிக்கவும், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
Published by:Archana R
First published:

Tags: Avocado, Healthy Lifestyle

அடுத்த செய்தி