• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சூரியகாந்தி விதைகளை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்..? நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

சூரியகாந்தி விதைகளை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்..? நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை

முக்கியமாக சூரியகாந்தி விதைகள் நோயைத் தடுக்கவும் போராடவும் உதவுகின்றன.

  • Share this:
உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் பல்வேறு உணவு மற்றும் இனிப்பு வகைகளில் விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விதைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பல பண்புகளை கொண்டுள்ளன. சூரியகாந்தி விதைகள் அவற்றில் அடங்கி இருக்கும் அதிக சத்துகளுக்காக புகழ் பெற்றது. வைட்டமின் ஈ நிறைந்து காணப்படும் சூரியகாந்தி விதைகள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது. கண் தொடர்பான நோய்களை தடுப்பதன் மூலம் இது நல்ல பார்வை திறன் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கிறது. அதிக சத்துகள் மற்றும் தனித்துவ சுவை கொண்டுள்ள சூரியகாந்தி விதைகள் நம் உணவில் அவசியம் இருக்க வேண்டும்.

மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்களின் நடுவில் காணப்படும் இந்த விதைகள் காணப்படுகின்றன. அவை கிரெயிஷ் பிளாக் கலரில் உள்ளன. ஆனால் நீங்கள் ஷெல்லைத் திறந்தால், உள்ளே ஒரு வெள்ளை நிற மென்மையான விதை கிடைக்கும். வழக்கமாக சமையலுக்காக பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய் இந்த விதைகளிலிருந்தே எடுக்கப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் எவ்வளவு ஆரோக்கியமானவை, இவற்றை நம் உணவில் ஏன் சேர்த்து கொள்ள வேண்டும், சேர்த்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

நோய்த்தொற்றை எதிர்த்து போராட உதவும் :

முக்கியமாக சூரியகாந்தி விதைகள் நோயைத் தடுக்கவும் போராடவும் உதவுகின்றன. ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல சிறந்த மூலமாகும். சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள செலினியம் வீக்கத்தையும், நோய்த்தொற்றையும் எதிர்த்துப் போராடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

ஆன்ட்டிஆக்ஸிடன்டஸ் அதிகம்:

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை கொழுப்பில் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இந்த விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் சளி மற்றும் இருமல் அறிகுறிகளை குறைக்க உதவும்.



எடை இழப்பிற்கு உதவும்:

சூரியகாந்தி விதைகளில் டயட்ரி நார்ச்சத்து (dietary fibre) அதிகம் காணப்படுகிறது. இது அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு இன்றி வயிற்றை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. ஜீரண கோளாறுகளையும் சரி செய்கிறது.

சுறுசுறுப்பு:

சூரியகாந்தி விதைகளில் காணப்படும் வைட்டமின் பி 1 (Thiamin extract) மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு தேவையான போதுமான ஆற்றலை உருவாக்கி, நாம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்க உதவுகிறது.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு... சூரியகாந்தி விதைகளின் 5 நன்மைகள்!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

சூரியகாந்தி விதைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்ஸ் (phytosterols) உள்ளன. இவை கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது மட்டுமின்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய பைட்டோஸ்டெரால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பல ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைக்கின்றன.



சரும அழகிற்கு:

சூரியகாந்தி விதைகளில் இருக்கும் லினோலெனிக், ஒலிக் மற்றும் பால்மிடிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சரும பொலிவு மற்றும் பராமரிப்பிற்கு உதவுகின்றன. தோல் திசுக்களுக்கு (skin tissues) ஸ்மூத்னஸ்ஸை வழங்குகின்றன. கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உருவாவதற்கும் உதவுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல் நச்சுக்களை வெளியேற்ற :

சூரியகாந்தி விதைகளில் காணப்படும் மற்றொரு முக்கிய சத்து மெக்னீசியம். அதிகளவில் இந்த ஊட்டசத்து சூரியகாந்தி விதைகளில் இருப்பதால் இவற்றை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொண்டால் உடலில் இருக்கும் உயிரணுக்களிலிருந்து பாக்டீரியா மற்றும் பிற நச்சு கிருமிகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் மெக்னீசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் திறன்களையும் கொண்டுள்ளது தவிர ரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவும். சூரியகாந்தி விதைகளை வறுத்தும் சாப்பிடலாம். சாலட்கள் அல்லது இனிப்பு வகைகளில் மேலே தூவுவதன் மூலம் அல்லது ஸ்மூத்திஸ்களில் சேர்ப்பதன் மூலமும் அடிக்கடி சூரியகாந்தி விதைகளை நாம் சாப்பிடலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: