முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மங்களூரு ஸ்டைல் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி..? ரெசிபி ரெடி..!

மங்களூரு ஸ்டைல் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி..? ரெசிபி ரெடி..!

சிக்கன் நெய் ரோஸ்ட்

சிக்கன் நெய் ரோஸ்ட்

மங்களூரு மக்களின் விருப்பமான ‘சிக்கன் நெய் வறுவல்’ வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என காணலாம்…

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சண்டே என்றாலே அனைவரின் வீட்டிலும் மீன், ஆடு, கோழி என அசைவ உணவுகளின் வாசனை மூக்கை துளைக்கும். ஆனால், அனைவரும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என ஒரே ரெசிபியை செய்வோம்.

இந்த முறை ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாம் என நீங்க யோசித்தால், மங்களூரு மக்களின் விருப்பமான ‘சிக்கன் நெய் ரோஸ்டினை’ வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ.

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

சர்க்கரை - 1 டீஸ்பூன்.

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்.

கரம் மசாலா - 1 டீஸ்பூன்.

சீரகம் - 2 டீஸ்பூன்.

தக்காளி - 1.

புளி - எலுமிச்சை அளவு.

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.

வரமிளகாய் - 2.

நெய் - 10 டேபிள் ஸ்பூன்.

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்.

கொத்தமல்லி (நறுக்கியது) - 1/2 கப்.

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை படி :

சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு முன்னதாக, ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல்லுப்பு போட்டு நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இதே போல, எடுத்துக்கொண்ட தக்காளியினை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கோப்பையில் தண்ணீருடன் சிறிதளவு புளியை கரைத்து புளி கரைசல் தயார் செய்யவும்.

தற்போது ஒரு பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில், நறுக்கிய சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து, ஒரு 20 நிமிடத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.

பின்னர் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து சூடேற்றவும். நெய் நன்கு கரைந்ததும் இதில் சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, வரமிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு கரைந்து மசாலா திடமாக மாறும் நிலையில் இதில் புளி கரைசல் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஊற வைத்த சிக்கன் சேர்த்து 4 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

சிக்கன் நன்கு வெந்த பின் இதில் மீதமுள்ள நெய், சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவிட சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!.

First published:

Tags: Chicken masala, Chicken recipe, Food recipes