பிரான்ஸ் நாட்டின் பானமான மூஸ் இப்போது இந்தியாவிலும் டிரெண்டாகி வருகிறது. அடிக்கும் வெயிலுக்கு ஃபர்பெக்டான குளிர் பானமாக இருப்பதால் பலரும் விருபி குடிக்கின்றனர். அதுவும் ஆரஞ்சு பழத்தின் சாறில் ஐஸ்கிரீமை மூழ்க வைத்து செய்யப்படும் இது சுவையில் அலாதியான அனுபவத்தை நமக்கு தருகிறது. சரி எப்படி இதை வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
வண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்
ஆரஞ்சு பழம் - 1
பால் - 250 மில்லி லிட்டர்
ஆரஞ்சு எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஆரஞ்சு பழத்தின் தோல் நீக்கி அதன் சதைப்பகுதிகளை மட்டும் கொட்டை நீக்கி தோலுறித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் பாலை தண்ணீர் ஊற்றாமல் சர்க்கரை சேர்த்து சுண்ட காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளுங்கள்.
கேக்கிற்கு விப்பிங் கிரீம் தயாரிப்பது போல் வெண்ணெய்யை குளிர வைத்து முட்டை அடிக்கும் கரண்டி கொண்டு நன்கு கலக்குங்கள். நன்கு கலந்ததும் பனி மலை போல் உருவாகும். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஃபிங்கர் சிக்கன் இப்படித்தான் செய்யனுமா..? ஈசியான ரெசிபி இதோ...
இப்போய்ஜு ஒரு கிண்ணத்தில் காய்ச்சி குளிர வைத்த பால், வண்ணிலா ஐஸ்க்ரீம், ஆரஞ்சு பழ சதைப்பகுதி, ஆரஞ்சு எசன்ஸ் மற்றும் அடித்து வைத்த வெண்ணெய் என அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
பின் அதை அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பதத்தில் குடிக்கலாம். நீங்கள் குடித்த முதல் சிப்பிலேயே இதுவரை அனுபவிக்காத சுவை உணர்வை உங்களுக்கு தரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy juice, Summer tips