முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளுர்ச்சி தரும் புதினா ஜூஸ் : இதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளுர்ச்சி தரும் புதினா ஜூஸ் : இதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

புதினா ஜூஸ்

புதினா ஜூஸ்

ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. மேலும் நுரையீரலை சுத்தப்படுத்தி பலப்படுத்தும்.

  • Last Updated :

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் புதினாவை ஜூஸ் செய்து அருந்துவது நல்லது.

புதினா ஜூஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்...

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை - ஒன்று

தேன் - 2 ஸ்பூன்

புதினா - 1 கட்டு

இஞ்சி - ஒரு துண்டு

உப்பு - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

சீரக தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் புதினாவை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். அரைத்த விழுதுடன் தேன், உப்பு, சீரக தூள், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டவும். இதனுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கலக்கவும். பின்னர் எலுமிச்சை துண்டுடன் அலங்கரித்து பரிமாறவும்.

புதினா ஜூஸ் நன்மைகள் :

* புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும்.

* ஜலதோஷம் மற்றும் காய்ச்சலாம் அவதிப்படுபவர்கள் புதினா சாறினை எடுத்துக் கொண்டால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். இது சிறந்த கிருமி நாசினி. மேலும் நுரையீரலை சுத்தப்படுத்தி பலப்படுத்தும்.

வெயில் காலம் தானேனு அளவுக்கு அதிகமாக மோர் குடிக்காதீங்க... மீறினால் இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க..!

* புதினா சாறு சருமத்திற்கு போஷாக்கும் அளிக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையான சருமத்தை தரும். அலர்ஜி, சரும எரிச்சல், மங்கு ஆகியவற்றை போக்கிவிடும். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்கி சரும பொலிவை தரும்.

* சட்னி, ஜூஸ் என புதினாவை எப்படி பயன்படுத்தினாலும் அதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். மேலும் புதினா அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

* புதினா வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.

First published:

Tags: Healthy juice, Mint, Summer Food