ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஊரடங்கால் கேள்விக்குறியாகும் கோடைக்கால விற்பனை: இளநீர், தர்பூசணி, வெள்ளரி வியாபாரிகள் கவலை!

ஊரடங்கால் கேள்விக்குறியாகும் கோடைக்கால விற்பனை: இளநீர், தர்பூசணி, வெள்ளரி வியாபாரிகள் கவலை!

தர்பூசணி : 90% தண்ணீர் நிறைந்த பழம் என்பதால் உடல் வற்றுவதை தடுத்து குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு எலக்ட்ரோலைட்ஸ் கொண்டது. கல்லீரல், சிறுநீரகத்திற்கு நல்லது.

தர்பூசணி : 90% தண்ணீர் நிறைந்த பழம் என்பதால் உடல் வற்றுவதை தடுத்து குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு எலக்ட்ரோலைட்ஸ் கொண்டது. கல்லீரல், சிறுநீரகத்திற்கு நல்லது.

செடியிலேயே அழுகிப் போவதை காண மனமில்லாத விவசாயிகள், அவர்களே அறுவடை செய்து, வியாபாரத்திலும் களமிறங்கியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோடை காலத்தை மட்டுமே நம்பியுள்ள இளநீர், தர்பூசணி, வெள்ளரி பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஊரடங்கால் கேள்விக் குறியாகியுள்ளது.

  கோடை காலம் என்றாலே குளுகுளு குளிர்பானங்கள் தான் நினைவுக்கு வரும். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, இயற்கையாகவே நார்ச்சத்து மிகுந்த இளநீர், தர்பூசணி, வெள்ளரி பழங்களையும், பழச்சாறுகளையும் குடித்து மக்கள் வெப்பத்தை தணிப்பதுண்டு. ஆனால், இந்தாண்டு ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், கோடை வியாபாரத்தை மட்டுமே நம்பி, நம்பிக்கையுடன் காத்திருந்த வியாபாரிகள் தற்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

  சாலையோர கடைகளிலேயே நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்கும். ஆனால், தற்போது 200 ரூபாய்க்கு வியாபாரம் நடப்பதே பெரிய விஷயமாக இருப்பதாகவும், பல நாட்களில் வியாபாரமின்றி பழங்களை கால்நடைகளுக்கு கொட்டிச் செல்வதாகவும் குமுறுகின்றனர் வியாபாரிகள்.

  மறுபுறம் செடியிலேயே அழுகிப் போவதை காண மனமில்லாத விவசாயிகள், அவர்களே அறுவடை செய்து, வியாபாரத்திலும் களமிறங்கியுள்ளனர். ஆனால் வாங்குவதற்குத்தான் ஆளில்லை. கிடைத்தவரை செலவுக்கு ஆகும் என, யாரேனும் வாங்க வருவார்களா என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

  கோடை வெயில் கொளுத்தும் 3 மாத வருமானத்தை கொண்டுதான், அடுத்த சில மாதங்களுக்கு இவர்கள் பிழைப்பு நடத்துவார்கள். ஆனால் தற்போதே வருமானம் இல்லாததால், அடுத்தடுத்த மாதங்களை எப்படி கழிக்கப் போகிறோம் என கவலையில் தவித்து வருகின்றனர் வியாபாரிகள்.

  Also see...


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Food, Lifestyle, Lockdown, Summer