இந்த சம்மருக்கு எந்த மாதிரியான டையட் எடுத்துக்கொள்வது நல்லது..?

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நம் உடலை வெப்பத்திலிருந்து தணிப்பது அவசியம். அதற்கு நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் சில மாற்றங்களை செய்தல் நல்லது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

இந்த சம்மருக்கு எந்த மாதிரியான டையட் எடுத்துக்கொள்வது நல்லது..?
மாதிரி படம்
  • Share this:
கோடை காலத்தில் நம்முடைய முதல் வேலை உடலின் நீர் சத்தை குறையாமல் பார்த்துக்கொள்வதுதான். அதை செய்தாலே போதுமான அளவு வெப்பத்தின் தாக்குதலிலிருந்து தப்பித்துவிடலாம்.

அதற்கு முதலில் தண்ணீர் அதிகம் அருந்துவது நல்லது. அதேபோல் உணவு உட்கொண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் அது உங்கள் செரிமாணத்தை பாதிக்கலாம்.

தண்ணீர் நிறைந்த காய்கறிகள் , பழங்களை சாப்பிடுவதும் நீர் சத்தை அதிகரிக்கவும், தக்க வைக்கவும் உதவும் மந்திரம்.




பூசணிக்காய் , புடலங்காய் நீர்ச்சத்து கொண்ட காய்கள். எனவே அவற்றை சமைத்து சாப்பிடுதல் நல்லது. அதோடு அதில் ஆண்டிஆக்ஸிடண்டும் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது.

வெள்ளரியும் தண்ணீர் நிறைந்தது. இதையும் தினசரி உணவோடு சாப்பிடுதல் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும்.எலுமிச்சை : கோடைக்காலம் வந்துவிட்டாலே எலுமிச்சைக்கான டிமாண்டும் கூடி விடும். ஏனெனில் அந்த அளவுக்கு உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கச் செய்யும் பழமாகும். எனவே எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து உப்பு, சர்க்கரை கலந்து குடித்தால் நன்றாக இருக்கும்.

தர்பூசணி : தர்பூசணியும் கோடையில் கிடைக்கக் கூடிய பழ வகைகளில் ஒன்று. இதுவும் நீரேற்றத்திற்கு உகந்த பழம்.

மெலோன் பழம் : மஸ்க் மெலோன் பழமும் ஜூஸ் போட்டு குடிப்பது சம்மருக்கு குளுர்ச்சியாகவும். புத்துணர்வும் அளிக்கக் கூடியது.

தவிர்க்க வேண்டியவை : காரமான உணவுகள், மசாலாக்கள் நிறைந்த உணவு, எண்ணெய் உணவு, செரிமாணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவு போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.











Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading