சம்மர் வந்துவிட்டாலே மோர் குழம்பு, தயிர் சாதம் என உடலுக்கு குளுர்ச்சி தரும் உணவுகளைதான் பெரும்பாலும் சாப்பிடுவோம். ஆனால் குறிப்பாக தயிர் சாதம் என்பது பலருடைய ஃபேவரெட் டிஷ் எனலாம். அவர்களுக்கு அந்த தயிர் சாதம் என்பது பிரியாணிக்கு இணையான சுவை மிக்க உணவாக நினைப்பார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு தயிர் சாதம் என்பது ஈடு இணையில்லா உணவு. அப்படித்தான் சுஜா வருணியின் கணவருக்கும் தயிர் சாதம் என்றால் கொள்ளை பிரியம் என்கிறார் சுஜா.
கோடைகாலத்தில் நீண்ட நேரம் கிட்சனில் நிற்க முடியாது என்பதால் எளிமையான உணவுகளை சமைத்துவிட்டு உடனே வெளியேறிவிட வேண்டும் என்கிறார் சுஜா. அதற்கு இந்த தயிர் சாதம் பெஸ்ட் பிளான் என்கிறார். தயிர் சாதம் தானே என சாதாரணமாக கிளறி வைத்துவிடாமல் நெய் , பால் என சுஜா செய்யும் கைப்பக்குவம் அனைவரையும் நாவூற வைக்கிறது. அந்த சுவையை நீங்களும் ருசிக்க உங்களுக்காக ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம்
தயிர்
பால்
கடுகு , உளுத்தம்பருப்பு மற்றும் சீரகம்
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
உப்பு
நெய்
செய்முறை :
சாதத்தை தேவையான அளவு குழைய பிசைந்துகொள்ளுங்கள். அதற்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளுங்கள்.
பின் அதில் தயிர் மற்றும் பால் சேர்த்து கிளறிவிடுங்கள். அதோடி தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். சாதத்தை கிளறி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாய் வைத்து காய்ந்ததும் நெய் விட்டு அதில் கடுகு , சீரகம் சேருங்கள். உளுத்தம் பருப்பை இறுதியாக வறுத்து போட வேண்டும். அப்போதுதான் சாப்பிடும்போது மொறு மொறுவென இருக்கும் என்கிறார் சுஜா.
இட்லி மாவில் ரிப்பன் பகோடா செய்யலாமா..? உடனே செய்யும் 5 நிமிட ரெசிபி...
தாளித்ததும் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குகள்.
வதங்கியதும் அதை அப்படியே கிளறி வைத்துள்ள சாதத்தில் கொட்டுங்கள்.
பின் அதே கடாயில் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து சாதத்தின் மேல் தூவுங்கள்.
அவ்வளவுதான் சுஜா வருணியின் தயிர் சாதம் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.